Random Posts

Header Ads

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் - 1 மணி நேரத்திற்கு ரூ.340/ மட்டுமே குறைந்த வாடகைக்கு!

 


விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் - 1 மணி நேரத்திற்கு ரூ.340/ மட்டுமே குறைந்த வாடகைக்கு!


மாவட்ட அறிவிப்பு


நாமக்கல் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.


வேலையாட்கள் பற்றாக்குறை


அதிலும் குறிப்பாகத் தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளைக், குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.


வேளாண் இயந்திரங்கள்


நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்குப் பயன் தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான மண் தள்ளும் இயந்திரம் 3, டிராக்டர் 6, JCB 2, Hitachi Crawler Excavator 1 என்ற எண்ணிக்கையில் உள்ளன.



டிராக்டரால் இயக்கக் கூடிய வைக்கோல் களைத்திடும் கருவி 2, சோளத்தட்டு அறுக்கும் கருவி 2, டிராக்டர் ட்ரெய்லர் 1, வைக்கோல் கட்டும் கருவி 2, நிலக்கடலைச் செடிப் பிடுங்கும் கருவி 4, 9 கொத்து கலப்பை 2, 11 கொத்துக்கலப்பை 2, இயநதிர் நடவை கருவி 2, கரை உயர்த்தி விதைநடும் கருவி 1, நிலக்கடலை செடியிலிருந்து நிலக்கடலை பறித்தல் கருவி 1 ஆகியவை வேளாண்துறையிடம் உள்ளன.


மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


வாடகைக்கு


இந்த உபகரணங்கள் இத்துறை மூலம் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.


1 மணி நேரத்திற்கு என்ன வாடகை?


டிராக்டரால் இயக்கக்கூடிய அனைத்து கருவிகளுக்கும் டிராக்டருடன் 1 மணி நேரத்திற்கு ரூ.340/ம், மண் தள்ளும் இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.840/ம்-, JCB இயந்திரத்திற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.660/ம்-, Hitachi Crawler Excavator 1 LD600f நேரத்திற்கு ரூ.1440/ம்- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.


நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தொடர்புக்கு


விவசாயிகள் மேற்காணும் இயந்திரங்கள் / உபகரணங்கள் வாடகைக்கு பெறுதல் தொடர்பாக செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை), மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், நாமக்கல், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வசந்தபுரம், திருச்சி மெயின் ரோடு, நாமக்கல் மற்றும் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), காவேரி கார்டன், சேலம் மெயின்ரோடு, திருச்செங்கோடு ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.



எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள், இத்திட்டத்தினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை விவசாயிகளுக்கு


இதனிடையே கோவைமாவட்ட ஆட்சியர் சமீரன் கூறுகையில், மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர்கள், மண் அள்ளும் இயந்திரம்,சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம், நிலம் சமன் செய்தல்,வயல் பரப்பை உயர்த்துதல், ஆழ உழுதல், பாசன நீர் குழாய்கள் அமைக்க நீண்ட பள்ளம் தோண்டுதல், மரம் நட குழி வெட்டுதல், அறுவடை செய்தல், வைக்கோல் கட்டு கட்டுதல், பிரித்து உலர்த்துதல் உட்பட வேளாண் பணிகளை மேற்கொள்ள உதவும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்கள், இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


1 மணி நேரத்திற்கு என்ன வாடகை?


இதேபோல், தென்னை மட்டையைத் தூளாக்கும் கருவி, பைப் லைன் பள்ளம் தோண்டும் கருவி, மரம் நட குழி வெட்டும் கருவி, சோளம் அறுவடை இயந்திரம், வைக்கோல், சோளத் தட்டுகளை உருளை கட்டுகளாக்கும் கருவி, பிரேக்குடன் கூடிய ஹைட்ராலிக் டிப்பர் டிரெய்லர் ஆகியவை, மணிக்கு, ரூ.340 வாடகைக்கும், மண் அள்ளுவதற்கும், பண்ணை குட்டை அமைக்கவும், புதர்களை அகற்றவும் டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம் மணிக்கு, ரூ.1,440 வாடகைக்கும் வழங்கப்படுகிறது.



மேலும் பல வேளாண் இயந்திரங்கள்


மேலும் சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு, ரூ.660 வாடகைக்கும், புல்டோசர்கள் மணிக்கு, ரூ.840க்கும், வாடகைக்குப் பெற்றுக்கொள்ளலாம்.


கோவை மாவட்ட விவசாயிகள் தொடர்புக்கு


இந்த இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், தடாகம் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுகலாம். அல்லது, 0422-2964838, 2966500 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


பயிர்க் காப்பீட்டு கட்டணத்தில் மாற்றம்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!


10 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரட்டிப்பாக்கும் புதிய பட்ஜெட் திட்டம்!!


சோலார் மின் இணைப்புக்கு ரூ.3 லட்சம் மானியம்!! உடனே பயன்பெறுங்கள் விவசாயிகளே!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

 

Post a Comment

0 Comments