சிறுதானிய பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க மானியம்!! பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க, ரூ.35.8 லட்சம் ஒதுக்கீடு!!


கோவை மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானியப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்க ரூ.35.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


நோயில்லா வாழ்க்கை


நம் முன்னோர்களின் நோயில்லா வாழ்க்கைக்கும், நீண்ட ஆயுளுக்கும், கட்டுக்கோப்பான உடலமைப்புக்கும் அவர்கள் சிறுதானியங்களைத் தொடர்ச்சியாகத் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டதே காரணம். ஆக நோயின்றி வாழ சிறுதானியங்கள் வித்திடுகின்றன என்பதே உண்மை.



அந்த வகையில், சிறுதானிய பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழக அரசு உழவர் நலத்துறை சார்பில், மானியம் வழங்கப்படுகிறது.


இது குறித்து, கோவை மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட இயக்குனர் சித்ராதேவி கூறுகையில்:


ரூ.35.8 லட்சம் ஒதுக்கீடு


கோவை மாவட்டத்தில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க, ரூ.35.8 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இம்மாவட்டத்தில், 350 ஏக்கரில் சோளம், 25 ஏக்கரில் கம்பு செயல் விளக்க திடல் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


உரங்கள் ஒதுக்கீடு


அதற்கு தேவையான உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை உரம், வறட்சியை தாக்கி வளரக்கூடிய பூசா ஹைரொஜெல் போன்ற இடுபொருட்கள், மானியத்துடன் வட்டார வேளாண் விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட உள்ளது.



50% மானியம் ஒதுக்கீடு


இதற்கு பின்னேற்பு மானியமாக, 50 சதவீதம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் வழங்கப்படும். மானியங்களின் விவரங்களை, வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி, விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


மருத்துவப் பயன்கள்


ஆறுமாதக் குழந்தை முதல் அறுபது வயது பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். சிறுதானியம் என்பது வரகு, சாமை தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் உள்ள சிறிய அளவிலான தானியங்கள் ஆகும்.


எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.


கம்பு பயன்கள்


ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.


திணை பயன்கள்


இதயத்தைப் பலப்படுத்தும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.



சாமை பயன்கள்


ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.


கேழ்வரகு பயன்கள்


எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.


வரகு பயன்கள்


உடல் எடையைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது.


குதிரைவாலி பயன்கள்


சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.


மேலும் படிக்க....


ஆடிப்பட்டத்தில் எந்தெந்த நோய்கள் பயிர்களை தாக்கும்? பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?


விவசாயிகளின் வரப்பிரசாதமான பஞ்சகாவ்யா தயாரிப்பது எப்படி? பயிர்களுக்குப் பயன்படுத்தும் முறை!!


PMKSY - 34 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டம்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post