பயறு வகைப் பயிர்களில் மகசூல் அதிகரிப்புக்கு விவசாயிகள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள்!!


மதுரை மாவட்டத்தில் பயறுவகைப் பயிர்கள் அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு வருகின்றது. உதாரணமாக உளுந்து பயிரானது 1225 எக்டேர் பரப்பளவிலும் பாசிப்பயிரானது 2738 எக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்படுகின்றது. பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்காமலும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமலும் விவசாயிகள் குறைந்தளவு மகசூல் மட்டுமே எடுக்கின்றனர் வேளாண் விவசாயப்பெருமக்கள் கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.



பயறுவகைப் பயிர்கள் விதை நேர்த்தி


ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேற்கூறிய உயிர் உரங்களுடன் பயனுள்ள பாக்டீரியாக்களை கலந்து விதைக்கலாம். விதை நேர்த்தி செய்யாவிடில் ரைசோபியம் 4 பாக்கெட் (800 கிராம்/ஏக்கர்), தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாக்டீரியாக்கள் 4 பாக்கெட் 800 கிராம்/ஏக்கர், ஆகியவற்றுடன் 25 கிலோ கிராம் தொழுஉரம் மற்றும் 25 கிலோ கிராம் மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இடவேண்டும்.


ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்


விதைப்பதற்கு முன் இறவைப் பயிராக இருந்தால் ஏக்கருக்கு 14 கிலோ யூரியா , 43 கிலோ டி.ஏ.பி 17 கிலோ பொட்டாஷ் மற்றும் 4 கிலோ கந்தகச்சத்து இடவேண்டும். மானாவாரிப்பயிருக்கு 7 கிலோ யூரியா 22 கிலோ டி.ஏ.பி மற்றும் 8 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். மானாவாரி மற்றும் இறவைப்பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் டி.ஏ.பி (2 கிலோ , 100 லி தண்ணீர்) என்ற அளவில் கரைத்து வடிகட்டி தெளிந்த நீரை பூக்கும் தருணத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும்.



பயறுவகைப் பயிர்கள் பூச்சி மேலாண்மை முறைகள்


பச்சைக் காய்த்துளைப்பானை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையிலும், பறவைத்தாங்கிகள் ஏக்கருக்கு 20 என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். டைகுளோர்வாஸ் பூச்சி மருந்தினை 250 மிலி எடுத்து 250 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும். 


சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண அட்டை ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் பயிரின் உயரத்திற்கு ஏற்ப குச்சியில் கட்டித்தொங்க விடவேண்டும். வேப்ப எண்ணெய் 200 மி.லி யை 10 லிட்டரில் தண்ணீரில் கலந்து ஒட்டுத் திரவத்துடன் (சோப்புக் கரைசல்) சேர்த்து தெளிக்கவேண்டும்.


பயறுவகைப் பயிர்கள் நோய் மேலாண்மை முறைகள்


மஞ்சள் தேமல் நோய் இளம் இலைகளின் ஆங்காங்கே மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் திட்டுதிட்டாக ஒழுங்கற்ற மஞ்சளும் பச்சையும் கலந்து காணப்படும். இந்நோயானது பெமிசியா டபாசி வெள்ளை ஈயினால் பரவுகிறது. நல்ல தரமான விதைகளை பயன்படுத்துவதோடு களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மீதைல் டெமட்டான் ஏக்கருக்கு 320 ml என்ற அளவில் விதைத்த 30 மற்றும் 45 நாளில் தெளிக்க வேண்டும்.



தகவல் வெளியீடு


இத்தகவலை மதுரை, வேளாண்மை அறிவியல் நிலைய முனைவர் சீ.கிருஷ்ணகுமார் மற்றும் முனைவர் மு.ஹேமலதா ஆகியோர் தெரிவித்தனர்.


மேலும் படிக்க....


சணல் அலங்காரப் பொருள் உற்பத்தி மற்றும் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!


மழை பாதித்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!!


ஆடி, புரட்டாசி, தை மற்றும் சித்திரை பட்டங்களுக்கு ஏற்ற அதிக மகசூல் தரக்கூடிய உளுந்து இரகங்கள்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS ன்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

 

 

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post