ஐந்து நாட்களுக்கான
வானிலை முன்னறிவிப்பு! விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்!!
சேலம் மாவட்ட
வேளாண் வானிலை மையம் தகவல்
சேலம் மாவட்டத்தில்,
மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை சந்தியூர்
வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெகதாம்பாள் மற்றும் செ.பிரபாகரன்,
வானிலை பதிவாளர் கூறியதாவது,
சேலம் மாவட்டத்தில்
அடுத்த ஐந்து நாட்களுக்கு (18.12.2021 முதல் 22.12.2021 வரை) மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31oC ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 18oC ஆகவும் இருக்கும்.
காற்றின் வேகமானது மணிக்கு 0 முதல் 4 கி.மீ ஆக வீசக்கடும்.
நிலவக்கூடிய
வானிலையின் காரணமாக உளுந்தில் இலைப்புள்ளி நோயின் தாக்கம் ஏற்படக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த
மேங்கோசெப் 1000 கிராம்/எக்டர் என்றளவில் நோய் தென்பட்ட ஆரம்ப நிலையிலும் மற்றும்
10 நாட்களுக்கு பிறகும் தெளிக்கவும்.
நிலவக்கூடிய
வானிலையின் காரணமாக குருத்து ஈ-யின் தாக்கம் சோளத்தில் அதிகம் ஏற்படக்கூடும். எனவே,
இதனைக் கட்டுப்படுத்த டைமீத்தோயேட் 30 EC 500 மி.லி/எக்டர் என்ற அளவில் தெளிக்கவும்.
தற்பொழுது நிலவி
வரும் சூழ்நிலையில் வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோய் தாக்கம் தென்பட்டால் கார்பென்டாசிம்
0.1 சதவீதம் அல்லது ப்ராபிகனோசோல் 0.1% அல்லது மான்கோசெப் 0.25% மற்றும் டீ போல் (ஒட்டும்
திரவம்) கலந்து 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
தக்காளியில்
வாடல் நோய் தாக்குதல் உள்ள வயலில் நீர் தேங்குவதை தடுக்க வேண்டும் .சூடோமோனாஸ் புலோசன்சஸ்
-2.5 கிலோ கிராம் / ஹெக்டர் என்றளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடவேண்டும்
தாக்குதல் அதிகமாக உள்ள வயலில் காப்பர் ஆக்சிகுளோரைடு 2 கிராம் / லிட்டர் தண்ணீரில்
கலந்து தெளிக்க வேண்டும் .
நிலவக்கூடிய
வானிலையின் காரணமாக மக்காச்சோளத்தில் அடிச்சாம்பல் நோய் ஏற்படக்கூடும். இதனை கட்டுப்படுத்த
மேங்கோசெப் 1 கிலோ/எக்டர் என்ற அளவில் நடவு செய்த 20 நாட்களுக்கு பிறகு தெளிக்கவும்.
நிலவி வரும்
வானிலையின் காரணத்தால் வெண்டையில் சாம்பல் நோயின் தாக்கம் ஏற்படக்கூடும். இதனை கட்டுப்படுத்த
நோயின் அறிகுறி தெரிந்ததும் கார்பென்டாஸிம் மருந்தினை 1 கிராம்/லிட்டர் என்ற அளவில்
மழை அல்லாத நாட்களில் தெளிக்கவும் மற்றும் தேவைப்பட்டால் அடுத்த 15 நாளில் தெளிக்கவும்.
நிலவக்கூடிய
வானிலையின் காரணமாக மிளகாயில் சாம்பல் நோய் ஏற்படக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த கார்பென்டாசிம்
1 கிராம்/லிட்டர் என்ற அளவில் மூன்று தெளிப்புகள் தெளிக்கவும் மற்றும் அறிகுறிகள் தெரிந்ததிலிருந்து
15 நாட்கள் ஒரு முறை தெளிக்கவும்.
நிலவக்கூடிய
வானிலையின் காரணமாக மல்லிகையில் இலைப்புள்ளி நோய் ஏற்படக்கூடும். இதனைக் கட்டுப்படுத்த
இலைவழி தெளிப்பாக மேங்கோசெப் மருந்தினை 2.5 கிராம்/லிட்டர் என்ற அளவில் மாத இடைவெளியில்
தெளிக்கவும்.
நிலவக்கூடிய
வானிலையின் காரணமாக வெங்காயத்தில் கோழி கால் வேர் அழுகல் நோய் ஏற்படக்கூடும். இதனைக்
கட்டுப்படுத்த நடவு செய்த வயல்களில் ட்ரைக்கோடெர்மா விரிடி-யை 2.5 கிலோ/ஹெக்டர் என்ற
அளவில் தொழு உரத்துடன் கலந்து போடவும். அல்லது நடவு செய்வதற்கு முன்பு விதைகளை திரம்
அல்லது கேப்டன் கொண்டு 4 கிராம்/கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்து நடவு செய்யவும்.
கால்நடைகளைப்
பொறுத்தமட்டில் மழைக் காலங்களில் மாடுகளில் கோமாரி நோய் பரவுவதை தடுக்க நோய் பாதித்த
கால்நடைகளை உடனடியாக அகற்றி தனியே வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும். சுண்ணாம்பு தூளை
மாட்டுக் கொட்டகையை சுற்றி தூவ வேண்டும். நோயுள்ள பகுதிகளிலிருந்து புதிதாக கால்நடைகளை
வாங்ககூடாது. வருடத்திற்கு இருமுறை கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்.
கோழிப்பண்ணையின்
ஆழ்கூளத்தில் ஈரப்பதம் காணப்பட்டால் சுண்ணாம்புத் தூளை தூவி கிளறி விடுவதன் மூலம் ஆழ்கூளத்தின்
ஈரப்பதத்தை குறைப்பதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
நாட்டுக்கோழிகளை ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்க்கும் போது ஆழ்கூளம் (கடலைப்பொட்டு, நெல் உமி ) போன்றவை நனைந்து கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆழ்கூளம் அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டால் சுண்ணாம்புத் தூளை தூவி கிளறி விடவேண்டும்.
இதனால் ஆழ்கூளத்தின் ஈரப்பதம் குறைவதுடன்,
சுண்ணாம்புத் தூள் கிருமி நாசினியாகவும் செயல்பட்டு கோழிகளில் நோய் பரவுவதை தடுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு,
திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் – 636 203,
0427 242 2550, 90955 13102, 70109 00282.
மேலும் படிக்க....
கிசான் கிரெடிட் கார்டு KCC கால்நடை வளர்ப்புக்கு வட்டிதொகை முழுவதும் தள்ளுபடி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம்
உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய
தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப்
குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.
வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...