மணிலாவில் அதிக இலாபம் ஈட்ட யோசனை வேண்டுமா? வேளாண்துறையினரின் அறிவுரை!!

 


மணிலாவில் அதிக இலாபம் ஈட்ட யோசனை வேண்டுமா? வேளாண்துறையினரின் அறிவுரை!!


பொதுவாகக் கார்த்திகைப் பட்டத்தில் மணிலா விதைப்பண்ணை அமைத்து விவசாயிகள் இரட்டிப்பு இலாபம் பெறலாம் என விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் க.கதிரேசன் தெரிவித்தார்.


விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மணிலா கார்த்திகை பட்டத்தில் அதிகளவில் விதைக்கப்படுகிறது. எனவே, இந்தப்பட்டத்தில் மணிலா விதைப்பண்ணை அமைத்து அதிக இலாபம் பெறலாம்.



மணிலா ரகங்கள்


மணிலாப் பயிரில் விதைப்பண்ணை அமைக்க தரணி, கதிரி-6, கதிரி-9, டிஎம்வி 14. ஜிஜேஜி 31. ஜிஜேஜி 9. ரகங்களில் ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகள் உள்ளன.


விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகி மானிய விலையில் விதைகளைப் பெற்று விதைப் பண்ணை அமைக்கலாம்.


விதைக்க வழிமுறைகள்


விதைகளை விதைப்பதற்கு முன் மணிலா ரைசோபியம் நுண்ணுயிர் பாக்கெட்டை ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்திய பின் விதைக்கவும்.



விதைத்த 30 நாட்களுக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி விதைப்பண்ணையை பதிவு கட்டணமாக ரூ.25 (ஒரு விதைப்பு அறிக்கை) வயல் ஆய்வுக் கட்டணமாக ரூ.50 ஒரு ஏக்கருக்கு) பரிசோதனை கட்டணமாக ரூ.30 ஒரு விதைப்பு அறிக்கை) என்ற செலுத்த வேண்டும்.


அலுவலர்களின் வயல் ஆய்வு


விதைச்சான்று அலுவலர்கள் விதைத்த 60து நாள் மற்றும் 90வது நாள் என 2 முறை வயலில் ஆய்வு செய்வார்கள்.


3வதாக 135 நாட்களுக்குள் மணிலா விதைக் குவியலை ஆய்வு செய்வார்கள்.


இந்த வயல் ஆய்வின் போது பிற ரக கலவன்கள் ஏதாவது இருந்தால் அதனை அப்புறப்படுத்தச் சொல்வார்கள்.


மணிலாப் பயிருக்கு அடியுரமாக ஜிப்சம் எக்கருக்கு 80 கிலோவும், விதைத்த 45து நாள் மேலுரமாக 80 கிலோ என மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதனால் திரட்சியான காய்கள் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும்.



இரட்டிப்பு லாபம்


மேலும் தகுதியான விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அரசு வழங்குவதால் விதைப்பண்மை விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க....


கனமழையிலும் செழித்து வளரும் நிலக்கடலை! கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை சாகுபடி!!


நிலக்கடலையில் விதை நேர்த்தி முறை எவ்வாறு கையாள்வது முழு விவிபரம் இதோ!!


இயற்கை முறை வேளாண்மைக்கு ஏற்ற மண்ணை தயாரிப்பது எப்படி?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள். மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

 

வாட்சப் குழு சேர் GROUP 1 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 2 Time to Tips Family.

வாட்சப் குழு சேர் GROUP 3 Time to Tips Family.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments