Random Posts

Header Ads

100 விவசாய உற்பத்தி மையங்களில் தேனீ பரிசோதனைக் கூடங்கள்!! மத்திய அரசு தகவல்!!

 


100 விவசாய உற்பத்தி மையங்களில் தேனீ பரிசோதனைக் கூடங்கள்!! மத்திய அரசு தகவல்!!


மத்திய அரசு தகவல்


நாடு முழுவதும் தேனீ வளர்ப்போர் அமைத்துள்ள 100 விவசாய உற்பத்தி மையங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

தேசிய வோளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (டிரைபட்), தேசிய பால் வளர்ச்சிவாரியம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய தேனீ வாரியம் நடத்திய அகில இந்திய அளவிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகையில் மத்திய வேளாண் அமைச்சக கூடுதல் செயலாளர் அபிலாக்‌ஷ் லிகி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 


இந்தக் கருத்தரங்கில் பேசுகையில் மத்திய அரசு தொடங்கிய தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டம் குறித்து லிகி பேசினார். இத்திட்டத்தின் அமலாக்கம், நாட்டில் இனிப்புப் புரட்சியை ஏற்படுத்துவதில் மிகப் பெரிய நடவடிக்கை என்றார் அவர்.

 

தேனில் கலப்படம் செய்யும் பிரச்னைக்குத் தீர்வு காண தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன்திட்டம் உதவும் எனவும் லிகி தெரிவித்தார். தேன் மற்றும் தேன் கூடுகள் தயாரிப்புகளை அடையாளம் காண மதுகிரந்தி இணையளத்தை தேசிய தேனீ வாரியம் தொடங்கியுள்ளது. 


நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேன் பரிசோதனை கூடங்களை அமைக்க தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டம், திட்டமிட்டுள்ளது. தேனீ வளர்ப்போரின் 100 விவசாய உற்பத்தி மையங்களில் இந்தப் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்படும்.



தேனீ வளர்ப்போருக்கான விவசாய உற்பத்திச் சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவற்றை அமைப்பது தேனீ வளர்ப்புத்துறையை நிலையாகச் செயல்பட வைக்கும் என அபிலாக்‌ஷ் லிகி கூறினார்.

 

தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் என்.கே.பாட்லே பேசுகையில், தேசியத் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி, தேனீ வளர்ப்போருக்கு உண்மையான பயன்களை அளிக்க வேண்டும் எனக் கூறினார். 


தேனீ வளர்ப்போரின் வருமானத்தை அதிகரிக்க, தேன் உற்பத்தியுடன், இதர தயாரிப்புகளான ராயல் ஜெல்லி, தேனீ மகரந்தம், தேனீ மெழுகு, தேனீ விஷம், தேன்கூடு எண்ணெய் ஆகியவற்றையும் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

 


இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, இந்த கருத்தரங்கில் பங்கேற்ற நிபுணர்கள் பதில் அளித்தனர். இந்தக் கருத்தரங்கில் அரசு மற்றும் தனியார் துறை, மாநில, மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள், தேனி வளர்ப்போர் உட்பட 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


மேலும் படிக்க....


3 ஏக்கர்‌ வரை நிலம்‌ உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000 வரை மானியம்‌ வங்கி கணக்கில் செலுத்தப்படும்!!


குறைவான நீரில் உளுந்து சாகுபடி நிறைவான மகசூல் பெற வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை!!


விவசாயிகள் நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்களை தேர்வு செய்து அதிக மகசூல் பெறலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments