Random Posts

Header Ads

வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்பினால் மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு அழைப்பு!

 


வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்பினால் மாடித் தோட்டம் கிட் வாங்க அரசு அழைப்பு!


வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க விரும்பினால் விதை, பை, உரம், சொட்டு நீர் பாசன அமைப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்படும் என்றும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் தோட்டக்கலை துறை மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.


வீட்டித் தோட்டம் அல்லது மாடித் தோட்டம்


வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், மானிய விலையில் ‘கிட் வழங்கப்படுகிறது. 



கொரோனா மற்றும் அதன் மாற்றங்கள் காரணமாக, சந்தைக்கு சென்று காய்கறி வாங்குவது என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஆகவே வீட்டுத் தோட்டம் அமைக்கும் இந்த திட்டம் தற்போது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

திட்டத்தின் கீழ் வழங்கும் பொருட்கள் எவை?


இந்த திட்டம் வழங்கும் தொகுப்பில், ஆறுவகையான காய்கறி பாக்கெட்டுகள், செடிவளா்ப்பு பைகள், தென்னை நார்க்கழிவு, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, உயிரியல் பூச்சிக்கொல்லி டிரைகோடொ்மா, வேப்பஎண்ணெய் இவற்றுடன் செயல்முறை விளக்க குறிப்பேடும் உள்ளது.

 

மாடித்தோட்டம் அமைப்பதற்குத் தேவையான கிட் மட்டுமல்லாது சொட்டு நீர் குழாய் அமைப்புகளையும் அரசு மானிய விலையில் வழங்குகிறது என்பதும் குறிப்பிடதக்கது.

 



ஆன்லைனில் மாடித் தோட்டம் கிட் பெற செய்ய வேண்டியது


மாடித்தோட்ட கிட் வாங்க விரும்புவோர் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில், தங்கள் புகைப்படத்தையும், ஆதார் புகைப்படத்தையும், தேவையான காய்கறி தொகுப்புகளையும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம், இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும்.

 

கொரோனா காலக்கட்டத்தில், வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் அமைத்தல் என்பது சரியான முடிவு. ஏனேன்றால் வரும் காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வது என்பதே பெரிய சவாலாக இருக்கும் என தோன்றுகிறது. 


எனவே மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.




நேரடியாக வாங்க விரும்புவோர்க்கான வசதி பற்றிய விவரம்


உங்கள் அருகில் உள்ள மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், ஆதார் அட்டை நகலை கொடுத்து விதைகள், இயற்கை உரம் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பையை, நீங்கள் பெற்று கொள்ளலாம். 


அத்துடன் விற்பனையகங்களை தேடி வரும் மக்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் அதைப் பராமரித்தல் குறித்த விளக்கமும் அளிக்கப்படுவது குறிப்பிடதக்கது.


மேலும் படிக்க....


வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிக்கு மானியம்! வேளாண்துறை தகவல்!!


வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் பெற அழைப்பு! 25.77 லட்சம் மானியம்!!


PM-KMY: திட்டத்தின் கீழ், ரூபாய் 3,000 விவசாயிகளுக்கு ஓய்வு ஊதியம்! எவ்வாறு பதிவு செய்வது?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments