Random Posts

Header Ads

மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் பயிற்சி!!


மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் பயிற்சி!!


அத்திவெட்டி கிராம விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் பயிற்சி


மதுக்கூர் வட்டார வேளாண் துறையின் கீழ் அனைத்து கிராம அண்ணா அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமமான அத்திவெட்டியில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மூலம் மண்வள அட்டை இயக்கத்தின் சார்பில் வேளாண் உதவி இயக்குனர் கோமதி தங்கம் தலைமையில் அத்திவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. 


மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி மண்வளம் காத்தலின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை அதிகப்படுத்துவதில் நுண்ணுயிர்களின் பங்கு மற்றும் ரசாயன உரங்களை குறைத்து இயற்கையான ஜீவாமிர்தம் மண்புழு உரம் மீன் அமினோ அமிலம் போன்றவைகளை பயன்படுத்தி தென்னை முதலான பயிர்களில் குறைந்த செலவில் தற்சார்பு முறையில் சாகுபடி செய்வது குறித்து முன்னோடி இயற்கை விவசாயி ராமாம்பாள்புரம் கணேசன் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். 



ரசாயன உரங்கள் தவிர்த்து இயற்கை உரங்களான கடல்பாசி உரம் திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் குறித்து சிறிய கருத்து காட்சியும் அட்மா திட்ட அலுவலர்கள் சுகிதா ராஜு ஐயா மணி ஆகியோர் செய்து இருந்தனர். அத்திவெட்டி கிராமத்தில் சிறப்பு முன்னெடுப்பாக மண் பரிசோதனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை ஆய்வுக்குவழங்கிடவும் வேளாண்மை அலுவலர் சாந்தி கேட்டுக்கொண்டார்.



விவசாயிகள் கூட்டத்தில் சமச்சீர் உர நிர்வாகம் குறித்த விளக்கம்


திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், வேளாண்மை உதவி இயக்குனர் அலவலகத்தில் தொழில்நுட்ப மேலாளர் ஈழவேணி முன்னிலையில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. 




மொத்தமாக 25 விவசாயிகள் கலந்து கொண்ட அந்த விவசாய கூட்டத்தில் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் s.தங்கப்பழம் வேளாண்மைக்கல்லூரி மாணவிகளான அனுஷியா, மௌலிகா, பிரதிக்ஷா, கலைச்செல்வி, சாரதி, சந்திரா, கிருத்திகா, அபிசாகு, அமலா ஜோசி, ஆர்த்ரா, அமல சினேகா மற்றும் சின்சி ஆகியோர் கலந்து கொண்டு சமச்சீர் உர நிர்வாகம், ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த விளக்கம் போன்றவற்றை கொடுத்தனர். 


மண்வள அட்டை மற்றும் இலை வண்ண அட்டை பயன்படுத்தும் முறை பற்றிய செயல்விளக்கம் போன்றவற்றை செய்து காண்பித்தனர். இலை வண்ண அட்டையை பயன்படுத்தி தாவரங்களில் நைட்ரஜன் அளவைக் கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு தழைச்சத்து உரம் இடுதல் வேண்டும் எனவும் நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் பெருஊட்டச் சத்துக்கள் அளிப்பது குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. 



மேலும் மண்வள அட்டையை பயன்படுத்தி மண்ணின் தரத்தை அறிதல் குறித்தும் மண் பரிசோதனையின் முக்கியத்துவங்கள் குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. பயிர்களில் அதிக விளைச்சல் பெறுவதற்கு சமச்சீர் உர நிர்வாகம் மிக அவசியம் என்றும் இயற்கை உரங்களை பயன்படுத்துதல் குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது.


மேலும் படிக்க....


PM Kisan பயனாளிகளுக்கான, ஒரு நற்செய்தி! PM கிசான் மந்தன் யோஜனாவின் முக்கிய அம்சங்கள்!!


முன்னுரிமை அடிப்படையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கல்! உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி!!


விவசாயிகளின் அடிப்படை விபரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு இடுபொருள் மானியத்தில் வழங்கல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments