வெந்தயக் கீரை சாகுபடி முறைகள் ஒரு எக்டரிலிருந்து 500-700 கிலோ விதை கிடைக்கும்!!
வெந்தய இலைகள் ஹிந்தியில் மேத்தி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது உலகின் பெரும்பாலும் மத்திய தரைக்கடல் பகுதியில் வளரக்கூடிய மூலிகை தாவரமாகும். வெந்தய விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் அதிக அளவில் காணப்படுகிறது.
ஆனால் வெந்தயக்கீரையை நாம் பெரிதாகக்கண்டு கொள்வதே இல்லை. இருப்பினும், ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் மருத்துவ பயன்கள் மற்றும் பண்புகள் ஏராளமாக உள்ளன. இக்காரணங்களால் தான் இந்த வெந்தய கீரைகள் உலகளவில் பிரபலமடைந்து உள்ளது.
வெந்தயக் கீரையில் உள்ள ஊட்டச்சத்துகள்
- நீர் சத்துக்கள்- 86.1 கி கால்சியம்- 360 மி.கி
- கொழுப்பு 0.9 கி ஆக்சாலிக் அமிலம்- 13 மி.கி
- புரோட்டின் 4.4 கி இரும்புசத்து – 17.2 மி.கி
- மினரல்ஸ் சத்துக்கள்-1.5 கி பொட்டாசியம் -51 மி.கி
- கார்போஹைட்ரேட்-6.0 கி சல்பர் – 167 மி.கி
- மாங்கனீஸ்-67.0 மி.கி வைட்டமின் ஏ – 6450 I.D
- பாஸ்பரஸ்-51.0 மி.கி நிக்கோடினிக் அமிலம் – 0.7 மி.கி
- சோடியம் – 76.1 மி.கி வைட்டமின் சி – 54 மி.கி
- தயமின் – 0.05 மி.கி குளோரின்- 165 மி.கி
வெந்தயக் கீரை விதைக்க சரியானக் காலம்
வெந்தயக் கீரை விதைக்க சரியானக் காலம் என்று பார்த்தால் சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் பொருத்தமாக இருக்கும் மற்றும் விளைச்சலும் நன்றாக அமையும்.
இரகங்கள்
கோ 1, பூசா எரிலி பன்சிங், லேம் தேர்வு 1, ராஜேந்திர கிராந்தி, கிஸார் சோனாலி, ஆர். எம்.டி 1 மற்றும் கோ 2.
சாகுபடி செய்ய உகந்த மண்
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்று அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு நிலங்கள் மற்றும் செம்மண் நிலங்கள் வெந்தயம் கீரைசாகுபடி செய்ய உகந்த நிலங்கள் ஆகும்.
விதையளவு
வெந்தயம் கீரை சாகுபடி பொறுத்த வரை ஒரு ஏக்கருக்கு 2 முதல் 2.5 கிலோ விதைகள் போதுமானது.
நிலம் தயாரித்தல்
வெந்தயக் கீரை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்றாக உழுது தக்கைப் பூண்டு விதைத்து, பூ வெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 5 டன் எருவைக் 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு உடன் கலந்து பரவலாகக்கொட்டி உழவு மேற்கொண்டு பிறகு பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைக்கும் முறைகள்
வெந்தயக் கீரை விதைகளை மணலில் கலந்து, பாத்திகளில் தூவ வேண்டும். பிறகு கையால் லேசாக அதனை கிளறி விட வேண்டும், இதன் பிறகு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.
நீர்ப்பாசனம் செய்யும் போது விதைகள் தண்ணீரில் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் பார்த்து நீர்ப்பாசனம் மேற்கொள்ள வேண்டும். விதைகள் விதைத்த 6 வது நாளில் விதைகள் முளைக்க தொடங்கிவிடும்.
களை நிர்வாகம்
விதை விதைத்த பத்து நாட்கள் கழித்து களைகளை அகற்ற வேண்டும். அப்பொழுது அதிகப்படியான செடிகளை களைக்க வேண்டும்.
பயிர்பாதுகாப்பு
பச்சை நிறத்தில் கீரைகள் இருப்பதால் பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் கோமியத்தில் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை மற்றும் மாலை நேரம் வேளைகளில் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
வெந்தயக் கீரை விதைத்து, 20 – 25 -நாட்களுக்கு பிறகு பசுங்கீரை அறுவடைக்கு தயாராக இருக்கும். 25 நாட்களுக்குப் பிறகு ஒரு கட்டு பசுங்கீரை 10-15 ரூபாய் வரை சந்தையில் விக்கலாம். கீரையை வேருடன் பிடிங்கி விற்பனை செய்யலாம். 90-100 நாட்களில் விதைகள் உருவாகிவிடும்.
மகசூல்
பசுங்கீரை – ஒரு எக்டரிலிருந்து 4000 – 5000 கிலோ வெந்தயக் கீரை கிடைக்கும்.
விதை – விதைகளை பொறுத்தவரை ஒரு எக்டரிலிருந்து 500-700 கிலோ விதை மகசூல் கிடைக்கும்.
கட்டுரை வெளியீடு
முனைவர் பி.ஜெய்சங்கர், உதவி பேராசிரியர், தோட்டக்கலை துறை, Email ID: sankarjai03@gmail.com, செ.தினேஷ்குமார், உதவி பேராசிரியர், வேளாண் விரிவாக்க துறை, Email ID: dinezselva@gmail.com, ல.விஷ்ணு, உதவி பேராசிரியர், தோட்டக்கலை துறை, தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி, பெரம்பலூர், Email ID: agrivish@gmail.com.
மேலும்
படிக்க....
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் ரூ.2000 வழங்கும் அரசு!!
விவசாயிகளுக்கு உத்திரவாதமில்லாமல் ரூ.1.60 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...