நெல்லிக்காய் சாகுபடி மற்றும் பராமரிப்பு பற்றிய முக்கிய தகவல்கள்! நெல்லியின் சிறப்பம்சங்கள் என்ன?
பொதுவாக நெல்லி நடுவதற்கு ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது நல்லது. அதை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
வேப்ப இலைகளை நன்கு காய வைத்துத் தூள் செய்து கொண்டு அந்த தூளை ஒரு பிடி எனும் அளவில் நெல்லியின் வேர் பகுதியில் போட வேண்டும். இது அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது.
அதோடு ஒரு கையளவு மாட்டுச் சாணத்தை சுமார் 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை எனும் நிலையில் ஊற்றி வர வேண்டும். பூச்சிக்கொல்லியாகச் செயல்படும் வேப்ப எண்ணெயை மாதம் ஒரு முறை தெளித்தும், சமையலறை கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
பூச்சிகளிடமிருந்து செடிகளைக் காக்கச் சமையலறையில் பயன்படுத்தும் குப்பைகளில் இருந்து செய்யும் உரமும், பஞ்சகாவ்யா உரமும் மிகுந்த பலனைக் கொடுக்க வல்லது. அதிலும் குறிப்பாக, டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாகப் பயன்படுத்தலாம்.
நெல்லிச்செடி வளர வளர நுனிகளைக் கிள்ளி விட்டுப் பக்கக்கிளைகளை வளரவிட வேண்டும். பக்கக்கிளைகளின் எண்ணிக்கையில் மூன்று கிளைகளுக்கு மேல் வளர விடத் தேவையில்லை.
பராமரிப்பு எனும் நிலையில் வாரம் ஒருமுறை என்று செடியைச் சுற்றி அடி மண்னைக் கொத்தி விட்டுப் பராமரிக்க வேண்டும். நெல்லிக்கனியின் பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நெல்லிக்காயின் நன்மைகள் மற்றும் பயன்கள்
பொதுவாக நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவையைக் கொண்டுள்ளது. நெல்லிக்காய் குளிர்ச்சித் தன்மை வாய்ந்த்தாக உள்ளதால் இதை உண்பதால் உடலின் சூடு குறையும்.
நெல்லிக்காய் உண்பதால் உடலில் சிறுநீர் பெருக்கத்திற்கு இது உதவும். நன்கு பசியைத் தூண்டும். குடல் வாயு, எலும்புருக்கி, கொப்புளங்கள் ஆகியவற்றை நீக்கும்.
இதை தினம் ஒன்று எனும் நிலையில் சாப்பிட்டு வந்தால் சளிப் பிரச்சனை குறையும். சுவாச மண்டலத்தை இது சீராக வைக்க உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தைப் போக்கி நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.
இது கண்ணின் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. அதோடு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் முதலான கண் குறைகளைக் களைய இது உதவுகிறது.
உடலின் இரத்த்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்திச் சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு ஏற்ற நல்ல எதிர்ப்பாற்றலைத் தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மேலும்
படிக்க....
எலுமிச்சை ஒருமுறை நடவு செய்தால் சுமார் 10 ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம்!!
மே 9 ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை!! விவசாய இயந்திரங்களுக்கு 50% சதவீதம் மானியம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...