எந்தெந்த காய்கறிகளை எந்தெந்த மாதங்களில் பயிரிடலாம்? சிறப்பு தகவல்கள்!!
தொடர்ந்து ஒரே பயிரைச் சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகளை எருவாகப் பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தினால் முந்தைய பயிரில் தங்கியிருக்கும் நோய்க்கிருமிகள் புதுப்பயிரைத் தாக்காதா என சந்தேகம் எழலாம்.
ஆனால் உண்மை என்னவெனில் முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. காய்கறிகள் மனிதர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் வகையில் பல சத்துக்களைக் கொண்டுள்ளன.
உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்கள் ஆகியவற்றை வழங்குவதுடன் சக்திக்குத் தேவைப்படும் மாவுச் சத்துக்களையும் அதிகமான அளவில் வழங்குகிறது. எனவே மாதவாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைத் தேவையினை கருத்தில் கொண்டும் பயிர்களைப் பயிரிட வேண்டும்.
அதாவது அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும் பயிரிடுவது அவசியம். அந்த வகையில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ற பயிர்களின் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜனவரி (மார்கழி - தை)
கத்தரி, மிளகாய், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி,கீரைகள்.
பிப்ரவரி (தை - மாசி)
கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன்,கீரைகள், கோவைக்காய்.
மார்ச் (மாசி - பங்குனி)
வெண்டை, தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
ஏப்ரல் (பங்குனி - சித்திரை)
கொத்தவரை, வெண்டை
மே (சித்திரை - வைகாசி)
கத்தரி, தக்காளி, கொத்தவரை.
ஜூன் (வைகாசி - ஆனி)
கத்தரி, தக்காளி, கோவை, பூசணி,கீரைகள், வெண்டை.செடி முருங்கை
ஜூலை (ஆனி -ஆடி)
மிளகாய், சுரை, பூசணி,பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
ஆகஸ்ட் (ஆடி - ஆவணி)
முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை..
செப்டம்பர் (ஆவணி - புரட்டாசி)
கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
அக்டோபர் (புரட்டாசி - ஐப்பசி)
கத்தரி, முள்ளங்கி.
நவம்பர் (ஐப்பசி - கார்த்திகை)
செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
டிசம்பர் (கார்த்திகை - மார்கழி)
கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
மேலும்
படிக்க....
மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!!
எலுமிச்சை ஒருமுறை நடவு செய்தால் சுமார் 10 ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கில் லாபம் ஈட்டலாம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...