கிராம பஞ்சாயத்துகளில் 8 நாட்களுக்கு முகாம்! கிசான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!!
கிசான் கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்திற்கு உட்பட 54 கிராம பஞ்சாயத்துகளில் வரும் 24-04-2022 முதல் 01-05-2022 வரை உள்ள 8 நாட்களுக்கு விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை வழங்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் சிவகாசி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் வங்கிகளின் மூலம் கடன் அட்டை வழங்குவதற்குறிய விண்ணப்பபடிவம் வழங்கப்பட உள்ளதால் விவசாயிகள் தங்களது
- ஆதார் அட்டை நகல்,
- குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட அளவு புகைப்படம்,
- வங்கி கணக்கு புத்தகம்,
- கம்யூட்டர் பட்டா மற்றும் அடங்கல்,
போன்ற நில ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறும் மேலும் தகவல்களுக்கு தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும் சிவகாசி வேளாண்மை உதவி இயக்குனர் ஜா.இரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை
தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்து தங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மூலம் கிசான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு எதிர்வரும் 24.4.22 முதல் 01.5.22 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய் கிராமங்களில் நேரடி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உரிய ஆவணங்களை அளித்து கடன் அட்டை பெற பதிவு செய்யலாம்.
மேலும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் அதன் மூலம் பயனாளிகளாக பதிவு செய்தல் திட்டங்களில் பயன் பெறும் முறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
அனைவரும் பங்கு பெற்று பயன்பெற வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முகாம் நடைபெறும் கிராமம் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று அருப்புக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
மேலும்
படிக்க....
நெல்லிக்காய் சாகுபடி மற்றும் பராமரிப்பு பற்றிய முக்கிய தகவல்கள்! நெல்லியின் சிறப்பம்சங்கள் என்ன?
மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...