பண்ணை குட்டையில் உள்ள நன்மைகள் என்ன? எவ்வாறு பண்ணைக் குட்டைகளை அமைப்பது?
மானாவாரி பகுதிகளில் மழை பெய்யும் தருணம் முடிந்தவரை நீரை நிலத்தி உறிஞ்ச செய்ய கோடை உழவு, சரிவுக்கு குறுக்கே உழவு மரப்பயிர் உள்ள இடங்களில் பெரிய வட்டபாத்தி அமைத்தல் நன்கு உதவும்.
நல்ல மழை பெய்தால் நிலத்தைவிட்டு நீர் ஓடாது தவழ்ந்து செல்லும் ஏற்பாடு தான் ஆழச்சால் அகலப்பாத்தி உத்தி கல்தூண்கள் வைத்து பாய்ந்து ஓடும் மழைநீரை மெதுவாக ஓடச் செய்யலாம். நீர் ஓடையில் செல்லும்போது தடுப்பணை இருப்பின் நீண்ட நேரம் நிலத்துள் நீர் உப்புக வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் உதவும் உத்திதான் பண்ணைக் குட்டை அமைத்தல் குறிப்பாக மானாவாரிப் பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் நிலத்தடி நீர் அதிகரித்திட கிணற்றிலும் போர்வெல் எனும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மேலே வர உதவுவது கண்கூடு.
ஐந்து ஏக்கர் பரப்புக்கு குறைந்தது அரை ஏக்கர் பரப்பிலாவது தன் தோட்டத்தின் பள்ளமான பகுதிகளில் இடம் தேர்வு செய்யலாம். பல இடங்களில் செம்மண் இருப்பின் நீர் சேமிப்பு காலம் குறைவாக வாய்ப்புள்ளதால் ‘சில்பாலின்’ எனும் நிலப் போர்வையாக அதாவது நீரை உட்புகாது தடுக்கும் தன்மை கொண்ட பாண்ட் லைனர்ஸ் எனும் ஜமுக்காளம் போன்ற பிட்கள் பயன்படுத்தலாம்.
இதற்கு மேலும் ஒரு இணை தொழிலாக மீன் வளர்க்கலாம். எட்டு மாதம் எந்த இடத்திலும் குறைந்தது எட்டடி நீர் சேமித்தால் மீன் வளர்ப்பது எளிது. ஆனால் நவீன ஆராய்ச்சியின் பலனாக மீன் வளத்துறை மூலம் இன்னும் குறுகிய காலம் நீர் இருந்தாலும் அதில் வளர்த்திட வழிவகை உள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஸ்பெசல் சின்தட்டிக் பேப்ரிக்ஸ் மூலம் நிலத்தில் பரப்பும் பொருட்கள் தயாராகின்றன. 4 ஆண்டுகள் வரை ஆயுள் உடைய சூரிய ஒளியால் சேதமடையாதவாறு அல்ட்ரா வயலட் கதிர்கள் தாக்காதவாறு இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறிய அளவு அல்லது பெரிய அளவு பண்ணைக்குட்டைகள் அமைத்திட பலதுறைகள் உதவி வருகின்றன. தனியார் நிறுவனங்களும் வெகுவாக இந்த பண்ணைக்குட்டைகள் அமைத்திட உதவுகின்றன.
நீர் ஆதாரம் நல்ல நிலையில் இருப்பின் பயிர்களின் முக்கிய தருணங்களில் நீர் செலுத்திட மோட்டார் வைத்தும் நீர்பாய்ச்சலாம். மானாவாரியில் பழ மரங்கள் பேணவும் பண்ணைக் குட்டைகள் வெகுவாக உதவுகின்றன.
நிச்சயமாக மண் சரியாது. நீர் இல்லாத தருணம் கரைகளை முறையாக செப்பனிடல் நல்லது. வரப்புகளில் வெட்டிவேர் கிளைரிசிடியா, பூவரசு போன்ற தாவரங்களை நட்டு மண்சரியாது தடுத்திடலாம்.
மேலும் விபரம் பெற டாக்டர் பா.இளங்கோவன் 98420 07125 .
மேலும்
படிக்க....
எந்தெந்த காய்கறிகளை எந்தெந்த மாதங்களில் பயிரிடலாம்? சிறப்பு தகவல்கள்!!
மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...