நாட்டுக்கோழிகளில் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கும் தீவன மேலாண்மை முறைகள்!!


சுற்றுப்புறச் சூழலின் வெப்பத்தின் அளவு நாட்டுக் கோழிகளின் உடல் வெப்ப நிலையைக் காட்டிலும் அதிகரித்துக் காணப்பட்டால் வெப்பத் தாக்கல் ஏற்பட்டு அயர்ச்சி உள்ளாகிக் கோழிகள் உடனடியாக இறக்க நேரிடும். அதிக சுற்றுச்சூழல் வெப்பத்தின் காரணமாக கோழிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதிகமான இறப்பு ஏற்படுவதற்கு காரணமாகின்றது. 



வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தீவன பயன்பாட்டுத் திறன் குறையும் மேலும், நாட்டுக்கோழிகளில் சரியான உடல் வளர்ச்சியின்மை, கறியின் தன்மையில் மாற்றம், குறைந்த எண்ணிக்கையில் முட்டையிடுதல் மற்றும் முட்டையின் தன்மையில் மாற்றம் ஆகியன ஏற்படுகின்றது.


வெப்ப அயர்ச்சியால் பாதிக்கப்பட்ட கோழிகளைக் கண்டறிதல்


பிற கோழிகளிடமிருந்து தனித்துக் காணப்படும், கொட்டகைகளில் குளிர்ச்சியாக உள்ள பகுதிகளான தடுப்புச்சுவர் அருகே இருக்கும். அல்லது கொட்டகைகளில் காற்றோட்டம் உள்ள பகுதிக்குச் செல்லும், குடிநீர் தொட்டியை சுற்றி அல்லது தரையில் போடப்பட்டு இருக்கும் உமியில் உடம்பை புதைத்துக் கொள்ளும்.


வாயை திறந்து வேகமாக மூச்சு விட ஆரம்பிக்கும், தீவனம் உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ளும், குடிநீர் அதிகமாகப் பருகும்.



தீவனத்தின் மேலாண்மை மூலம் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கும் வழிமுறைகள்


கட்டுப்படுத்தப்பட்ட தீவன முறை பயன்படுத்துவதால் வெப்பம் தாக்கத்தை நாம் வெகுவாக குறைக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நாளில் அதிக வெப்பம் உண்டாகக் கூடிய நேரத்தை கணக்கிட்டு அதிலிருந்து ஆறு மணி நேரம் முன்பே தீவனம் கொடுக்கும் அளவை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும்.


அவ்வாறு செய்வதனால் தீவனம் ஜீரணம் ஆகும் போது உண்டாகக்கூடிய உடல் வெப்பமானது அதிக சுற்றுச்சூழல் வெப்பம் இருக்கும் சமயங்களில் உண்டாவதை தவிர்க்க முடியும். இதனாலேயே நாம் இரவிலும், விடியற்காலைப் பொழுதிலும் தீவனம் அளிக்க வேண்டும்.



முட்டையிடுகின்ற நாட்டுக்கோழிகளில் வெயில் காலங்களில் தீவனத்தை மாலை நேரங்களில் (மாலை 6 மணிக்கு மேல்) கொடுக்கின்ற பொழுது தீவனத்தை உபயோகப்படுத்திக் கொள்ளும் தன்மை அதிகமாகின்றது.


மேலும், சுண்ணாம்புச் சத்தினை உறிஞ்சும் தன்மையும் அதிகமாவதால் இரவு நேரங்களில் முட்டை ஓடு உறுவாவதற்கும் பெரிதும் உதவுகிறது. மேலும் வெயில் காலங்களில் தீவனத்தில் சிறிதளவு தண்ணீரை தெளித்து ஈரமான தீவனமாக அளிப்பதனால் தீவனம் உட்கொள்ளும் அளவும் அதிகரிக்கின்றது.


கோழிகளுக்கு குச்சித்தீவனத்தை வெயில் காலங்களில் அளிக்கின்ற பொழுது தீவனம் உட்கொள்ளும்போது விரையமாகின்ற எரிசக்தியானது சேமிக்கப்படுகின்றது. அரைத்த தீவனத்தை கொடுக்கும் பொழுது எரிசக்தியின் விரையம் அதிகமாகும்.



பொதுவாக வெய்யில் நேரத்தில் கோழிகள் தண்ணீர் அதிகமாக அருந்தும் அதனால் தீவனம் எடுக்கின்ற அளவு குறைந்துவிடும். அதனால் தீவனத்தில் எரிசக்தியின் அளவை அதிகப்படுத்த வேண்டும். 


இதைக் கொழுப்புச் சத்து நிறைந்த தீவன மூலப் பொருள்களின் மூலம் அளிக்க வேண்டும். கோழிகளின் தீவனத்தில் கொழுப்பு அல்லது எண்ணெயின் அளவானது அதிகபட்சமாக 5 சதவிகிதம் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் பொழுது தீவனம் ஜீரணமாகும் பொழுது உருவாகும் வெப்ப உற்பத்தி குறைவதுடன் அதிக எரிசக்தி கொடுக்ககூடிய தன்மையும் கிடைக்கும். 


மேலும், தீவனத்தில் இருக்கின்ற கொழுப்பு அல்லது எண்ணெய் வயிறு மற்றும் குடல் பகுதியிலிருந்து மெதுவாக நகரும் தன்மை கொண்டதனால் அதிக தீவனத்தின் பயன்களை பெற முடியும்.


புரதச்சத்தானது ஜீரணமாவதற்கான அதிகமான தண்ணீர் தேவைப்படும்;. இதனால் வெயில் காலங்களில் தீவனத்தில் புரதச்சத்தின் அளவை அதிகரிக்காமல் அதில் சரிவிகிதமான அளவில் அமினோ அமிலங்களை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அதிலும் முக்கியமாக லைசின், மெத்தியோனின், திரியோனின் மற்றும் ஆர்ஜினின் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும்.



கூடுதலாக வைட்டனின் எ, பி மற்றும் இ யைத் தருவதால் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கலாம். அம்மோனியம் குளோரைட் (0.3-1.0%) மற்றும் சோடியம் பைகார்பனேட் (0.5%) கொடுப்பதால் கோழிகளின் தீவனம் மற்றும் குடிநீர் எடுத்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கும்.


தீவனத்தில் சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் ஆவியவற்றை சமநிலையில் பராமரிக்கப்பட வேண்டும். கிரோமியம், ஜிங்க் மற்றும் செலினியம் அகிய தாதுப்புக்களின் பங்கு வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள உதவுகின்றது.


வைட்டமின் சி அளித்தல் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கும். 1 கிராம் அஸ்கார்பிக் அமிலம்/1 லிட்டர் தண்ணீரில் அளிக்க வேண்டும். பிடாயின் என்ற வேதிப் பொருளை அளிப்பதாலும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கலாம்.


இதனுடன் பிற பொது மேலாண்மை முறைகளான கூரையின் மேற்புறத்தில் வெள்ளை நிற வர்ணம் அடிப்பது, கோழிகளுக்குத் தேவையான இடவசதியைக் கூடுதலாக கொடுப்பது, பண்ணைகளில் வெப்பக்காற்று கம்பி வலைகளின் வழியே ஊடுருவுவதைத் தவிர்க்கத் தண்ணீரில் நனைக்கப்பட்ட கோணிப்பைகளைக் கட்டித் தொங்கவிடுவது, 


நிழல் தரும் மரங்கள் வளர்ப்பது, பசுந்தீவன வகைக் கீரைகளை அதிகளவு நண்பகல் வேளையில் சிறிது சிறிதாக நறுக்கி உணவாகக் கொடுப்பது போன்றவற்றை கடைபிடிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியின் தாக்கத்தை நாம் குறைக்க முடியும்.



தகவல் வெளியீடு


முனைவர் இரா.தினேஷ்குமார், உதவிப் பேராசிரியர் மற்றும் முனைவர் க.அருணாசலம், பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கரூர்-6. 

 

மேலும் படிக்க....


பண்ணை குட்டையில் உள்ள நன்மைகள் என்ன? எவ்வாறு பண்ணைக்குட்டைகளை அமைப்பது?


கிராம பஞ்சாயத்துகளில் 8 நாட்களுக்கு முகாம்! கிசான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!!


மானிய விலையில் உரங்களை வாங்கி பயனடையுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post