1.60 லட்சம் ரூபாய் வரை பிணையமில்லா கடன்! விவசாய கடன் அட்டை பெற வேண்டுமா? சிறப்பு முகாம்கள்!!
இயற்கைப் பொய்க்கும் காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளைத் தீர்க்க ஏதுவாக விவசாயக் கடன் அட்டை (KCC) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கடன் அட்டையை அனைவரும் பெறும் வகையில், வரும் மே 1ம் தேதி வரை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன்
KCC எனப்படும் கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்கவும், விவசாயத்திற்கு குறைந்த விலையில் கடன் கிடைக்கவும் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் (KCC interest rate) கடன் வழங்கப்படுகிறது .
கிசான் கிரெடிட் கார்டில் வட்டி
கிசான் கிரெடிட் கார்டில் வாங்கப்படும் கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால், விவசாயி கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தினால், 4 சதவீத வட்டி மட்டும் செலுத்தினால் போதும்.
கிசான் கிரெடிட் கார்டு மூலம் பயிர் காப்பீடு
இது விவசாயிகளுக்கு மிக நல்ல திட்டமாகும். கிசான் கிரெடிட் கார்டு மூலம், விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யலாம். ஏதாவது காரணத்தால், தங்களின் பயிர்கள் அழிந்துபோனால், அவர்கள் இதற்கான இழப்பீட்டைப் பெறலாம். வெள்ள காலத்தில், தண்ணீரில் மூழ்கிப் பயிர் நாசமானாலோ அல்லது வறட்சியின் போதும் பயிர் கருகிப்போனாலோ, கிசான் கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிறப்பு முகாம்கள் மே 1ம் தேதி வரை
இருப்பினும் பல விவசாயிகள் இந்தக் கடன் அட்டையை வாங்காமல் இருப்பதால், அவர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு, விவசாய கடன் அட்டை வழங்குவதற்காக, இன்று முதவ் மே 1 வரை, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மேலும், அனைத்து ஊராட்சிகளிலும், இன்று நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில், பிரதமமந்திரியின் கவுரவ நிதி திட்டப் பயனாளிகளுக்கு, விவசாய கடன் அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும், நடக்கும் இந்த சிறப்பு முகாம்களில், இதுவரை பெறாதவர்களுக்கும் விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.
இதன் வாயிலாக விவசாயம் செய்ய, 1.60 லட்சம் ரூபாய் வரை, பிணையமில்லா கடன் வழங்கப்படுகிறது. வேளாண் இடுபொருட்களான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை வாங்கவும், உற்பத்திக்கு தேவையான நிதியுதவி பெறவும் முடியும்.
மேலும்
படிக்க....
பண்ணை குட்டையில் உள்ள நன்மைகள் என்ன? எவ்வாறு பண்ணைக்குட்டைகளை அமைப்பது?
நாட்டுக்கோழிகளில் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கும் தீவன மேலாண்மை முறைகள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...