வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உதவி இயக்குனர் மதுக்கூர் அவர்களின் கிசான் கிரெடிட் கார்டு குறித்த அறிவிப்பு!!

 

மதுக்கூர் வட்டாரத்திலுள்ள 48 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி உள்ள 33 பஞ்சாயத்துகளில் 8500  விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். 


வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து  பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம் இன்று (24ம் தேதி) முதல் 1.5.2022 வரை வேளாண் உதவி அலுவலர் உள்ளடக்கிய அலுவலர்களால் நாற்பத்தி எட்டு கிராமங்களிலும் நடைபெற உள்ளது. 



இன்று நடக்கும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கூட்டப்பொருளாக பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் அதற்கான விண்ணப்பங்கள் அனைத்து வேளாண்மை உதவி அலுவலர்கள் சிசி திட்ட பணியாளர்கள் அட்மா திட்ட பணியாளர்கள் 33 வருவாய் கிராமங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. 


pm-kisan திட்ட பயனாளிகள் பஞ்சாயத்து செயலாளர்கள் இடம் வடிவங்களில் நகல்களைப் பெற்று அத்துடன் கம்ப்யூட்டர் சிட்டா, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் செயலர் வசம் ஒப்படைக்கவும்.


வேளாண்மை உதவி அலுவலர்கள் விண்ணப்பங்களை பெற்று ஒருங்கிணைத்து மாவட்ட முன்னோடி வங்கி மூலம் பரிசீலனை செய்து உழவர் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.



மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் இன்று முதல் மே 1ம் தேதி வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத  பிஎம் கிசான்  திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும். 


இதன் மூலம் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை பிணையமில்லா கடன் வழங்கப்படுகிறது. விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் கடன்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும், மேலும் மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கி கடன் பெற முடியும். விவசாய கடன் அட்டை திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.


மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 4 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையானது விவசாயிகளின் நிலவரம்பை பொறுத்து மாறுபடும். 



விவசாய கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மண்டல ஊரக வங்கிகள், கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிராம அளவில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் பெறலாம். விவசாய கடன் அட்டை இல்லாத விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு  விவசாய கடன் அட்டை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை-உதவி இயக்குனர் மதுக்கூர் கேட்டுக்கொண்டுள்ளார். 


இன்றைய தினம் வேளாண் துணை இயக்குனர் தோட்டக்கலை அவர்களின் கண்காணிப்பின் கீழ் வேளாண் உதவி இயக்குனர்களின் மேற்பார்வையில் மதுக்கூரில் 33 பஞ்சாயத்துகளிலும் வேளாண் அலுவலர் சாந்தி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு கார்த்தி சுரேஷ் தினேஷ் மற்றும் முருகேஷ் இளங்கோ கிடங்கு கண்காணிப்பாளர் மதியழகன் கலையரசன் ஜெகதீசன் அட்மா திட்ட அலுவலர்கள் அய்யா மணி ராஜ் மற்றும் சிசி திட்ட பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி பவித்ரா மற்றும் பவதாரிணி ஆகியோரால் விவசாயிகளுக்கு சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டது. 



அனைத்து கூட்டங்களிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டத்தினை  சிறப்பாக ஏற்பாடு செய்து  இருந்தனர். பட்டுக்கோட்டை கோட்டத்திற்கான இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர்கள் மணி மற்றும் சரண் ஆகியோர் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொண்டு நமது பாலிசி நமது கையில் திட்டம் குறித்து  விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்.


இக்கூட்டத்தின் போது விவசாயிகளுக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்று பயிரான உளுந்து சோயா எள் போன்றவைகளின் தொழில்நுட்ப பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 


கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு கீழக்குறிச்சி கிராமத்தில் தென்னையில் ஏற்படும் ருகோஸ்வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டு பொறி ஏக்கருக்கு ஐந்து இடத்தில் தென்னந்தோப்புகளில் பொருத்துவது பற்றி செயல் விளக்கமாக செய்து காட்டினார்.  


எனவே மதுக்கூர் வட்டார விவசாயிகள் கிசான் கடன் அட்டை க்கான  முனைப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு படிவங்களை உரிய ஆவணங்களுடன் பஞ்சாயத்து செயலாளர் மூலம் ஒப்படைக்க வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.



தகவல் வெளியீடு


S.திலகவதி,

வேளாண்மை இணை இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


1.60 லட்சம் ரூபாய் வரை பிணையமில்லா கடன்! விவசாய கடன் அட்டை பெற வேண்டுமா? சிறப்பு முகாம்கள்!!


நாட்டுக்கோழிகளில் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கும் தீவன மேலாண்மை முறைகள்!!


பண்ணை குட்டையில் உள்ள நன்மைகள் என்ன? எவ்வாறு பண்ணைக்குட்டைகளை அமைப்பது?


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post