வேளாண்துறை சார்பில் ரூ. 227 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!


கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்கடன்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும், எவ்வாறு கடனுதவி வழங்கப்படும் என்பதை குறித்து, இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தொடங்கி வைத்தார். 



மேலும் வேளாண்துறை சார்பில் ரூ. 227 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கருணாநிதி எனக் குறிப்பிட்டார். 


கருணாநிதியின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளதையும், அவர் குறிப்பிட்டார். 


வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை அரசு பெருமைப்படுத்த, முழு முயற்சிகளையும் எடுத்துவருவதாக, அவர் கூறினார். விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்து வருவதையும், அவர் சுட்டிக்காட்டினார். 



கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர் கடன்கள் வழங்கப்படும் எனவும், மேலும் கிராமங்கள் தன்னிறைவு பெறும், நகரங்களை நோக்கி நகர்வது குறையும் எனவும் தெரிவித்தார்.


விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும், அவர் தெரிவித்தார். 


கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு தயார் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதுதவிர சாகுபடியை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். 



கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடதக்கது.

 


மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


PM Kisan 11வது தவணைத் தொகை இந்த தேதியில் வரும்! நரேந்திர சிங் தோமர் அறிவிப்பு!!


விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் ஒரு ஏக்கருக்கு 8640 ரூபாய் கிடைக்கும், முழு விவரம்!!


விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post