விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!!


விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்றது. தொழில்நுட்பங்கள் நிறைந்த பல்வேறு தொழில்களுக்குத் தேவைப்படுவது போலவே மூலதனம் என்பது விவசாயத்திற்கும் தேவை என்பதை மறுக்க முடியாது. 


மூலதனம் சார்ந்த நிலையில் அரசே குறைந்த வட்டியில் விவசாயிகளுக்குக் கடன்களை வழங்குகிறது. கிராமத்தின் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கப்படுகின்றன. 



இந்த கடனில் பாதியளவு விவசாயத்திற்குத் தேவையான பொருட்களாகவும், மீதியளவு விவசாயம் செய்ய தேவையான பணமாகவும் வழங்கப்படுகிறது. இத்தகைய கடன்களுக்குக் குறைவான வட்டியே விதிக்கப்படுகிறது என்பது கூடுதல் நன்மை.


விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த கடன் வசதி இரண்டு நிலைகளில் வழங்கப்படுகின்றன. விவசாயத்திற்குத் தேவையான விதைகள், உரங்கள், களைக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துக்கள் முதலான இடுபொருட்களாக வழங்கப்படுகிறது. 


இரண்டாவதாக, நீர் மேலாண்மை, எலி ஒழிப்பு, பூச்சி பூஞ்சாண மருந்து தெளித்தல், உழவு, களை எடுத்தல், அறுவடை முதலான வேலைகளுக்குத் தேவைப்படும் பணமாக வழங்கப்படுகிறது.



விவசாயிகளுக்கான பயன்


  • குறைந்த வட்டி


  • எளிய தவணை


  • உடனடி சேவை


கடன் பெற தேவையான தகுதிகள்


சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் வைத்திருக்க வேண்டும். குத்தகையாக இருப்பின் குத்தகை சான்று வைத்திருக்க வேண்டும். வேறு நிறுவனக் கடன்கள் பெற்றிருக்கக் கூடாது. அப்படி பெற்றிருந்தால் அந்த கடனைச் சரிவரக் கட்டக் கூடியவராக இருக்க வேண்டும்.


கடன் பெற தேவையான சான்றுகள்


  • நிலத்தின் சிட்டா


  • நிலத்தின் பட்டா


  • நில வரைபடம்


  • குத்தகை சான்று


  • கிராம நிர்வாக அலுவலரின் சான்று


  • புகைப்படம் 



கடன் பெறுவது எப்படி?


வங்கியில் பயிர்க்கடன் விண்ணப்பப் படிவம் வாங்கிப் பூர்த்தி செய்தல் வேண்டும். தேவையான சான்றிதழ்களை இணைத்து வங்கியில் கொடுக்க வேண்டும். வங்கியில் சொந்த கணக்கு வைத்திருக்க வேண்டும்.


திரும்பச் செலுத்தும் முறை


எந்த வகையான பயிர் சாகுபடிக்காகக் கடன் வழங்கப்படுகிறதோ அந்த பயிரின் அறுவடைக் காலம் முடிந்த இரண்டு மாதத்திற்குள் வட்டியும், அசலும் சேர்த்துக் கட்டி முடிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.


கடன்தொகை ஏக்கருக்கு ஏக்கர் ஆண்டுதோறும் மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கும். இந்த ஆண்டிற்கான ஏக்கருக்குக் கடன் தொகை எவ்வளவு என்பது மாவட்டத் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 



மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 மானியம் இன்று முதல் பதிவு செய்யலாம்!! உடனே விண்ணப்பியுங்கள்!!


மண் வளம் அதிகரிக்க பல பயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்பங்கள்! முழு விபரம் உள்ளே!!


விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post