விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்த விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் குறித்த ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
பாசன வசதியை ஏற்படுத்த நடவடிக்கை
ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், ஆட்சியர் பேசியதாவது:- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், விவசாயத்தை மேம்படுத்த நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பம்புகள் உள்ளிட்டவை பொருத்துவதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் 2007-2008-ம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள ரூ.50,000 வரை மானியம்
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையாக 50 விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50,000 வரை அரசால் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
300 பேருக்கு ஒப்புதல் மனுக்கள்
இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் 482 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வங்கிகள் தெரிவித்த 300 மனுக்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள 182 மனுக்களை விரைந்து பரிசீலனை செய்யவும், வட்டார அளவில் வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகள் குழு கூட்டம் நடத்தி விரைந்து கடன் வழங்கவும் வங்கிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும்
படிக்க....
PM-Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்த வாரம் வரும் 11-வது தவணைத் தொகை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...