மண்புழு உரம் பயிர்களுக்கு இட்டு மண் வளத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்க வேளாண்மை இணை இயக்குநர் வேண்டுகோள்!!
வேளாண்மை பயிர் சாகுபடியில் மண்ணில் அங்கக சத்துகள் உயிர் உரங்கள், நுண் சத்துகள் இரண்டாம் நிலை தனிமங்கள் மற்றும் பேரூட்டங்கள் சமச்சீரான அளவில் இருந்தால் மட்டுமே உற்பத்தி திறனை அதிகரிக்க இயலும்.
அரியலூர் மாவட்டத்தின் மண் வளத்தில் அங்கக சத்துகளின் அளவு குறைவாக உள்ளது. அங்கக சத்தின் அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தால் மட்டுமே இலக்கீன்படி, உற்பத்தி திறனை அதிகரிக்க இயலும்.
அங்கக சத்தை அதிகரிக்க தொழு உரம், ஊட்டம் ஏற்றிய தொழு உரம், மண்புழு உரம், நகராட்சி கம்போஸ்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை இட வேண்டும்.
அங்கக சத்து அதிகமுள்ள மண்புழு உரத்தை இடுவதால் மண்ணின் வளம் காப்பதுடன் கூடுதல் மகசூல் பெறலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்புழு உரத்தினை பயன்பாடு குறித்து அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
மண் புழுக்களால் மட்கக்கூடிய கழிவுப் பொருட்கள் உணவாக உட்கொள்ளப்பட்டு அதன் குடல் பகுதியில் நொதிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் செரிக்கப்பட்டு வெளியேறும் கழிவே மண்புழு உரமாகும்.
இந்தியாவில் 500 வகையான மண்புழுக்கள் இருந்தாலும் யூட்ரிலஸ் யூசினியே, எய்சீனியா போடிடா, பெரியோனிக்ஸ் போன்ற மண்புழுக்களே அதிகமாக மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தழை, மணி, சாம்பல்சத்து மட்டுமல்லாது நுண்ணூட்டச் சத்துக்களும் மண்புழு உரத்தில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துப்பொருட்கள் பயிர்களினால் எளிதில் கிரகிக்கப்படும் நிலையிலும் உள்ளது.
மண்புழு உரத்தில் காணப்படும் பொதுவான சத்துக்களில் அங்கக கார்பன் (சதம்) 9.15 -17.95, தழைச்சத்து 0.50 – 1.50, மணிச்சத்து (சதம்) 0.10 – 0.30, சாம்பல் சத்து (சதம்) 0.15 – 0.56, சோடியம் (சதம்) 0.06 – 0.30, கால்சியம் மற்றும் மெக்னீசியம் (மி.அஃகிலோ) 22.67 – 70, தாமிரம் (மி.கிஃகிலோ) 2.0 – 2.95, இரும்பு (மி.கிஃகிலோ) 2.0 – 9.3 என்ற அளவில் உள்ளது.
மண்புழு உரத்தை ஏக்கருக்கு நெல் பயிருக்கு 2 டன், கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம் பயிருக்கு 1 டன், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை மற்றும் இதர பயறு வகைகளுக்கு 500 கிலோ முதல் 1 டன்,
கரும்பு பயிருக்கு 2 டன், பருத்தி, மஞ்சள் பயிருக்கு 2 டன், காய்கறி வகைகள் தக்காளி, கத்தரி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு மற்றும் இதர காய்கறி பயிர்களுக்கு 1 டன், ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி 2 டன்,
தென்னை மரம் ஒன்றிற்கு 5 கிலோ, வாழை மரம் ஒன்றிற்கு 1 கிலோ, மாமரம், சப்போட்டா, முந்திரி, மாதுளை, பலா மரம் ஒன்றிற்கு 5 கிலோ, தேக்குசெடி ஒன்றிற்கு 3 கிலோ, மண் தொட்டி செடிகளுக்கு தொட்டி ஒன்றிற்கு 200 – 300 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
இவ்வாறு மண்புழு உரத்தை இட்டு மண் வளத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்கும்மாறு வேளாண்மை இணை இயக்குநர் இரா.பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
மேலும்
படிக்க....
நிலமற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு நிலம் வாங்க மானியம் | மின் இணைப்பு பெற 90% மானியம்!!
உழவன் செயலியில் வேளாண் கருவிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...