தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் 'அசானி' புயல் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!


வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'அசானி' புயல் தீவிரமடைந்து வருகிறது, இந்நிலையில் தமிழகத்தில், 14 மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்: தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, 'அசானி' புயலாக வலுவடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டது. 



இது, படிப்படியாக தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நாளை மாலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.


தற்போதைய நிலவரப்படி, அசானி புயல், ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டி கடலிலேயே பயணிக்கும் எனவும்; கரையை கடக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடலில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 


'அசானி' புயல் காரணமாக, தமிழகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சை, கடலுார், பெரம்பலுார், அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ஆகிய 14 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது.



தமிழகத்தின் பிற மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 12ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


வங்கக்கடலில் உருவான அசானி புயல் வடமேற்கு, வடகிழக்கு நோக்கி நகரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதாவது இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, மதுரையில் 40.5 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலுார்-இல், 39.9 ஆகவும்; சென்னை விமான நிலையம்: 38.8 ஆகவும்; கரூர் பரமத்தி, 38 ஆகவும்; ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, 37.9 டிகிரி செல்ஷியஸ் ஆக வெப்பநிலை பதிவாகி உள்ளது.

 

மேலும் படிக்க....


வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!!


தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!!


தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வுமையம் தகவல்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post