உழவன் செயலியில் வேளாண் கருவிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!


வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, வேளாண் கருவிகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம், வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களையும், அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.



வேளாண் இயந்திரமாக்கும் திட்டத்தின்கீழ் கீழ்கண்ட கருவிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.


  • நாற்று நடவு செய்யும் இயந்திரம்


  • பவர்டில்லர்


  • சுழல் கலப்பை


  • கதிரடிக்கும் இயந்திரம்


  • விசைத் தெளிப்பான்


  • தென்னை மரம் ஏறும் கருவி


  • குழிதோண்டும் கருவி


  • ட்ராக்டர்



விவசாயிகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறையின் ஒப்புதல், அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மானிய விலையில் பெறலாம் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.


தேவையான ஆவணங்கள்


கருவி மானியம் பெற தேவையான விண்ணப்பம் (இதை வேளாண் பொறியியல் துறை உதவி செயல் பொறியாளர் அலுவலகத்தில் பெறலாம்).


  • இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ


  • ஆதார் அட்டையின் நகல்


  • சிட்டா நகல்


  • நில வரைபட நகல்


  • சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று


  • சாதிச்சான்று நகல்


 


மானிய விவரங்கள்


டிராக்டர் : 75,000 முத்ல 1,25,000 வரை


பவர் டில்லர் : 40,000 முதல் 75,000 வரை


நடவு செய்யும் கருவி: 75,000 முதல் 2,00,000 வரை


சுழற்கலப்பை : 50,000 முதல் 63,000 வரை


விதைப்புக் கருவி: 35,000 முதல் 44,000 வரை


வரப்பு அமைக்கும் கருவி: 50,000 முதல் 63,000 வரை


வைக்கோல் கட்டும் கருவி : 50,000 முதல் 63,000 வரை


களையெடுக்கும் கருவி : 15,000 முதல் 19,000 வரை


வெட்டும் கருவி : 16,000 முதல் 25,000 வரை


விசைத் தெளிப்பான் : 8,000 முதல் 10,000 வரை


பூம் விசைத் தெளிப்பான் : 50,000 முதல் 63,000 வரை


செயல்முறை


விவசாயிகளின் விபரங்கள் வேளாண்மை பொறியியல் துறையின் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.



துறையிலிருந்து அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்ற பின் கருவிகள், இயந்திரங்களின் முழுதொகை குறித்த விவரங்களின் வரைவோலையின் மூலம் கொடுக்க வேண்டும்.


இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பெற்ற பின் வேளாண்மை பொறியியல் துரை அலுவலர்களால் உறுதி செய்யப்பட்டு அதன் பின் இயந்திரங்களுக்கான தொகை விவசாயியின் வங்கி கணக்கில் அனுப்பப்படும்.




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


எப்படி விண்ணப்பிப்பது?


தமிழக அரசின் உழவன் செயலியில் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் அவரது விண்ணப்பம், மத்திர அரசின் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் இணைக்கப்பட்டு செயல்முறைக்கு அனுப்பப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

 

மேலும் படிக்க....


நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள்!!


அங்கக வேளாண்மையில் களைக் கட்டுப்பாட்டு உத்திகள் விதைச்சான்று உதவி இயக்குனர் தகவல்!!


தென்னையில் காணப்படும் சாறு வடிதல் நோய்! கட்டுப்படுத்தாவிட்டால் மரமே அழிந்து விடும்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post