அங்கக வேளாண்மையில் களைக் கட்டுப்பாட்டு உத்திகள் விதைச்சான்று உதவி இயக்குனர் தகவல்!!
அங்கக வேளாண்மையில் களைக் கட்டுப்பாட்டு உத்திகள் மேற்கொள்ள வேண்டுமென தஞ்சாவூர், விதைச்சான்று உதவி இயக்குனர் முகமது பரூக் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
அங்கக வேளாண்மை முறையில் களைக் கட்டுப்பாடு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. இயற்கையின் ஓர் அங்கமாக விளங்கும் களைகளைக் கட்டுப்படுத்த மட்டுமே பயிர் உற்பத்தி செலவில் சுமார் 30 சதவிகிதம் தேவைப்படுகிறது. மேலும் சில வகை களைகள் விளைப் பொருட்களுடன் கலந்து அவற்றின் தரத்தையும் இழக்க செய்கிறது.
அங்கக வேளாண்மையில் களைகளை திறம்பட கட்டுப்படுத்த சிறந்த முறைகளை கையாள வேண்டும். நன்கு மக்காத எருவினை வயலில் பயன்படுத்துதல், களைகள் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் வரை வயலில் விட்டு வைத்தல், களைகளின் அதிக விதை உற்பத்தித் திறன் மற்றும் வீரிய பரவும் தன்மை, வளர் திறன் மற்றும் தகவமைப்பு திறன் ஆகியன பயிர்களை காட்டிலும் களைகளே நிலத்தில் காலங்காலமாய் அதிகமாக காணப்படுவதற்கான மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.
களைகளை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்துடன் நம் நிலங்களில் கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பல்வேறு விதமான களைக் கொல்லிகளை தவறான அளவு மற்றும் தவறான காலங்களில் பயன்படுத்தியதன் விளைவாக சில களைகள் மண்ணில் சாகாவரம் பெற்ற களைகளாக வலுவடைந்து, மேலும் சுற்றுச் சூழலைப் பெரிதும் மாசுபடுத்தி விட்டதால், இதனை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
களைக் கட்டுப்பாடு உத்திகள்
பயிர் சுழற்சியை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளுதல் வேண்டும். பயிர்சாகுபடி இல்லாத காலங்களில் கால்நடைகளை நிலத்திலே விடும்போது களைகளின் அடர்த்தி குறைவதுடன் தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்.
பயிர் சாகுபடி செய்யாத காலத்தில் நிலக்கடலை ,தட்டைப் பயறு ,கொள்ளு போன்றவற்றை ஊடு பயிர் செய்து மண்ணின் வளத்தையும் பாதுகாப்பதுடன் களைகளையும் வளரவிடாது தடுக்க முடியும்.
சாகுபடி துவங்கும் முன் அடி எருவாக இடப்படும் தொழுவுரம், கோழி எரு, பண்ணை கழிவு, கம்போஸ்ட் ஆகியன நன்கு மக்கிய நிலையில் இடவேண்டும்.
பயிர் சாகுபடிக்கு முன்னதாகவே வயலை சாகுபடிக்கு தயார் செய்யும் போது களைகளை முன்னதாகவே முளைக்கச் செய்து நிலத்தினை மேலாக உழவு செய்வதன் மூலம் மேற்பரப்பில் உள்ள பெரும்பாலான களைகளை கட்டுப்படுத்த முடியும்.
பயிர் சாகுபடியை சரியான பருவத்தில், சரியான அடர்த்தியில் வரிசை முறையில் மேற்கொள்வதன் மூலம் களைகள் வளர்வதை பெரிதும் குறைக்கலாம். சொட்டு நீர் பாசன முறை பயிர்கள் இருக்கும் இடங்களுக்கு நீர் அழிப்பதால் களைகளின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தி இதன் மூலம் குறைக்கலாம்.
ஒருங்கிணைந்த அங்கக பண்ணைய முறையில் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பயிர் சாகுபடியில் களைகளின் இடர்பாடு மிகவும் குறைகிறது.
சில வகை பயிர் சாகுபடி முறைகள் களைகள் முளைப்பதை இயற்கையாகவே தடுக்கிறது. பயிர் பாகங்களில் குறிப்பாக வேர்ப்பகுதியில் சுரக்கும் ஒருவித வேதிப்பொருட்கள் மண்ணிலுள்ள களைகளின் வேர் வளர்ச்சியை பெரிதும் பாதித்து களையை வளர விடாமல் தடுக்கிறது.
உதாரணமாக சோளம் ,மக்காச்சோளம், வெள்ளரி ,கடுகு ,சூரியகாந்தி மற்றும் சோயா மொச்சை ஆகிய ஆகிய பயிர்களை களை தடுப்பு பயிர்களாக பயன்படுத்தலாம்.
அங்கக மூடாக்கு /நிலப்போர்வை அமைத்து ஆண்டு முழுவதும் களைகள் பெருகாமல் கவனித்துக் கொள்ளலாம். அதாவது தீவனத்தில் எஞ்சும் பயிர் கழிவுகளையும், இலை தழை, மரப்பட்டை மற்றும் மரத்தூள் போன்ற பொருட்களை பயன்படுத்தி மூடாக்கிடலாம்.
மேற்கண்ட உத்திகளைப் பயன்படுத்தி அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத்தலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
PM Kisan இந்த விவசாயிகளுக்கு 11வது தவணையின் 2000 ரூபாய் கிடைக்காது! தவறுகளை சரிசெய்யவும்!!
வண்டல் மண்ணை உரமாகப் பயன்படுத்துங்கள்! மண்ணை வளமாக்க வயல்களில் குளத்து வண்டலை இடுங்கள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...