வண்டல் மண்ணை உரமாகப் பயன்படுத்துங்கள்! மண்ணை வளமாக்க வயல்களில் குளத்து வண்டலை  இடுங்கள்!!


மழை நீரில் அடித்து செல்லப்பட்டு குளத்தில் தேங்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள், குறுமண், களிமண் அடங்கிய கலவை குளத்து வண்டல் எனப்படுகிறது. குளத்து நீர் வற்றிய பிறகு உலர்ந்து கிடக்கும் இந்த வண்டல் மண்ணை நிலத்தில் உரமாகப் பயன்படுத்துவது என்பது நமது பாரம்பரிய விவசாய நடைமுறைகளில் ஒன்றாகும்.



வண்டலில் பௌதிக, இரசாயன உயிரியல் பண்புகள் மிகுந்திருப்பதோடு பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் அதிகளவு இருக்கும். இத்தைய வண்டல் மண்ணை உரமாகப் பயன்படுத்தும் வழக்கம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நீண்ட காலமாக இருந்து இத்தகைய வண்டல் மண்ணை உரமாகப் பயன்படுத்தும் வழக்கம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 


களித்தன்மையும், வண்டல் தன்மையும் அதிகமாக காணப்படுவதால் குளத்து வண்டல் மண் கறுப்பு நிறத்தில் மிகுந்த நயத்துடன் குறைந்தளவு பரும அடத்தியுடன் இருக்கும்.


குளத்து வண்டலை மணல்சாரி நிலங்களில் இடும்போது மண்ணின் நயம் மேம்படுவதோடு மண்ணரிபப்பும் தடுக்கப்படும். வண்டலின் களித்தன்மை நீர்பிடிப்புத்திறனை மேம்படுத்தி மண்ணிண் ஈரத்தமையை அதிகமாக்கும்.



அமில, களர் மற்றும் உவர் நிலங்களில் இடுவதால் மண்ணில் வேதியியல் பண்புகளைச் சீராக்கி நிலத்தின் தன்மை மேம்படுத்துவதோடு சிறந்த அங்கக இடுபொருளாகச் செயல்படுகிறது. 


வண்டலைத் தொடர்ந்து மண்ணில் இடும்பொழுது மண்ணின் நயம் பயிர் வளர்ச்சிக்கு தகுந்தவாறு மாற்றப்படுகிறது. வண்டலில் நன்மை தரக்கூடிய பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் இதர நுண்ணுயிரிகள் அதிகளவு இருப்பதோடு பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் எளிதில் கிடைக்கச் செய்கிறது.


சாகுபடிக்கு உதவாத மணல்சாரி நிலங்கள், அமில, களர் உவர் நிலங்கள் மற்றும் சரளை நிலத்தில் குளத்து வண்டலை இட்டு உழுது சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றலாம். மணற்பாங்கான நிலங்களில் எக்டருக்கு 50 முதல் 100 டன் வண்டலை இடவேண்டும். 


இவ்வாறு இடுவதின் மூலம் மண்ணின் பரும அடர்த்தி குறைந்து மண்ணின் நீர் பிடிப்புத் திறன் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீத்ம் உயர்வதோடு மண்ணிலுள்ள அங்கக கரிமச்சத்து 0.23 சதவீதத்திலிருந்து 0.92 சதவீதம் உயர்கிறது.



ஆகவே வேளாண் விவசாய பெருமக்கள் தங்கள் விலை நிலங்களில் குளத்து வண்டல் மண்ணைய் பயன்படுத்தி நிலத்தில் தோன்றும் பௌதிக, இரசாயன மற்றும் உயிரியல் இடர்களை சரி செய்து நிலைத்த மண் வளத்தை பெறுமாறு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர் முனைவர் கிருஷ்ணகுமார் (79043 10808) மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். இராமசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டனர்.

 

மேலும் படிக்க....



தமிழ்நாட்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும்!


PM-Kisan 11வது தவணை- வரும் மே 14, 15 ஆகிய தேதிகளில் ரூ.2,000 வழங்கப்படும்!!


உர மானியம் ரூ.2,500 ஆக உயர்வு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post