உர மானியம் ரூ.2,500 ஆக உயர்வு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!
விவசாயிகளுக்கான உர மானியத்தை 2500 ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. விவசாயிகள் தங்களது விவசாயத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்படுகிறது.
இந்த உர மானியம் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை எனவும், அதை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மானியத் தொகையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உர மானியத்தை தற்போதுள்ள 1,650 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் செலவு
உர மானியம் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ரூ.6,000 கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மானிய உயர்வு ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரம் தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்த காரணத்தால் அதன் சுமையை வாடிக்கையாளர்களான விவசாயிகள் மீது சுமத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு உண்டானது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில்தான் தற்போது உர மானியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
படிக்க....
பப்பாளி சாகுபடியில் 3 வருடத்திற்கு 6,33,000 வருமானம் விவசாயியின் அனுபவம் மற்றும் செலவினங்கள்!!
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் அதிக விவசாயிகளை ஊக்குவிக்க அரசின் புதிய திட்டம்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...