பப்பாளி சாகுபடியில் 3 வருடத்திற்கு 6,33,000 வருமானம் விவசாயியின் அனுபவம் மற்றும் செலவினங்கள்!!


சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரம், தர்மாபட்டி (இடையபட்டி) கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, த/பெ.வேலுசாமி, விவசாயம் செய்து வருகிறேன். 


எங்கள் பகுதியில் பொதுவாக நெல் பயிர், நிலக்கடலை மற்றும் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம். நல்ல மகசூல் கிடைக்கவில்லை மற்றும் போதிய வருமானமும் இல்லை என்பதால் வேளாண்மைத்துறையினரின் அறிவுரையால் மாற்று பயிர் முறையை கடைபிடித்து முதல்முறையாக பப்பாளி பயிர் சாகுபடி செய்ய முடிவு செய்தேன். 



அவர்களின் அறிவுரைப்படி ரெட் லேடி எனும் இரகத்தைத் தேர்வு செய்தேன். நடவு செய்வதற்கு முன்னர் பருவம், நிலம் தாயாரித்தல், விதை மற்றும் விதைப்பு முறை நாற்றாங்கள் தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை கடைபிடித்தேன். 


கேப்டான் கொண்டு 2 கிராம் எனும் அளவில் விதை நேர்த்தி செய்தேன். மாற்று பயிர் சாகுபடி முறையினை பின்பற்றி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்தனர்.


சிவகங்கை மவாட்டத்தில் மண் வகைகள் மற்றும் தட்ப வெப்ப நிலை பப்பாளி பயிர் சாகுபடி செய்ய ஏற்றதாக உள்ளது. பப்பாளி பயிர் பல வகைபட்ட மண்ணிலும் வளரக்கூடியது. 



களிமண்ணில் சாகுபடி செய்ய 1200/- மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வடிகால் வசதி இருப்பதன் மூலம் தண்டுபகுதியில் ஏற்படும் அழுகல் நோயினை கட்டுப்படுத்தலாம். வருடம் முழுவதும் பயிர் செய்யலாம். 


ஜீன் முதல் செப்டம்பர் வரை உள்ள காலங்கள் மிகவும் ஏற்றது. நடவு பருவத்தில் அதிக மழை இல்லாமல் இருப்பது நல்லது. நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது சமப்படுத்த வேண்டும். 


6 அடிக்கு 6 அடி இடைவெளியில் 1 / 2 அடி நீளம் அகலம் ஆழம் என்ற விதத்தில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் மண் மற்றும் தொழு உரம் நிரப்பி நாற்றுகளை குழியின் மத்தியில் நடவேண்டும்.



விதையும் விதைப்பும்


விதைப்பு : ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதைகள்


நாற்றாங்கால் 


1 கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைகளை தொழுஉரம் மற்றும் மண் நிரப்பி பாலித்தீன் பைகளில் 1 செ.மீ ஆழத்தில் விதைத்தேன். 


1 பையில் 1 விதைகள் வீதம் வைக்க வேண்டும். பின்பு பைகளை நிழல் படும் இடத்தில் வைத்து பூவாளி கொண்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுகள் 60 நாட்களில் நடவுக்கு தயாராகி விடும்.


நீர் நிர்வாகம் 


வாரம் 1 முறை நீர் பாய்ச்ச வேண்டும். செடிகளை சுற்றி த்ண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.



ஒருங்கிணைந்த ஊட்ட சத்து முறை


ஆண் செடிகளை நீக்கியவுடன் செடி ஒன்றிற்க்கு 50 கிராம் என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் – தொழுஉரம், மண்புழு உரங்களை மாதம் 2 முறை இடவேண்டும். மேலும் செடி ஒன்றிற்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா கொடுக்க வேண்டும். உரம் இட்ட பின்பு நீர் பாய்ச்ச வேண்டும்.


உர நிர்வாகம் 


யூரியா 90 கிராம், சூப்பர் பாஸ்பேட் 250 கிராம், பொட்டாஷ் 140 கிராம்


பப்பாளியில் பால் எடுத்தல் 


பப்பாளியில் பால் எடுத்தல் மூலம் எனக்கு அதிக லாபம் கிடைத்தது. ரெட்லேடி என்ற இரகத்திலிருந்து கிடைக்கும் பாலில் அதிக நொதி திறன் அடங்கியுள்ளது. பால் எடுக்க ரெட்லேடி இரகம் சிறந்தது. 



பால் எடுத்த பின்பு அந்த இரகங்களை உண்பதற்கு மற்றும் விற்பனைக்கு உபகோகபடுத்தலாம். முதிர்ந்த காய்களில் இருந்து பால் சேகரிக்க வேண்டும்.


பப்பாளியில் பால் எடுக்கும் முறை 


காய்களின் மேல் 2 முதல் 3 மில்லி மீட்டர் ஆழத்திற்கு நான்கு இடங்கள் நீளவாட்டில் கீறல் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு கீறிவிடுவதற்கு கூரிய பிளேடு, கூரான மூங்கில் தண்டு அல்லது துரு இல்லாத கத்தியை பயன்படுத்த வேண்டும். 


கீறல்களிலிருந்து வடியும் பாலை அலுமினிய தட்டு அல்லது ரெக்சின் அல்லது பாலீத்தீன் தாள்களில் சேகரிக்க வேண்டும். காய்களிலிருந்து பால் சேகரிப்பு அதிகாலையிலிருந்து காலை 10 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். 


3 அல்லது 4 நாட்கள் இடைவெளி விட்டு முன்பு பால் எடுத்த அதே காய்களில் மறுபடியும் பால் சேகரிக்கலாம். இவ்வாறு எடுத்த பாலை சூரிய ஒளியிலோ அல்லது 40 டிகிரி சென்டிகிரேடு செயற்கையான உலர் கருவியில் உலர்த்த வேண்டும். உலர்த்த தாமதம் ஏற்பட்டால் தரம் பாதிக்கும்.



எடுத்த பாலை உலர்த்த தாமதம் ஆகிவிட்டால் செயல்படுத்தும் முறை


பொட்டாசியம் மெட்டபைசல்பேட் என்ற இராசயனத்தை என்ற 0.05 சதம் 0.05 அளவில் பாலுடன் சேர்த்தால் பாலில் உள்ள பப்பைன் என்ற நொதி பொருள் சேதம் அடைவதை தவிர்க்கலாம். பின் அவற்றை பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.


பப்பாளி பாலின் பயன்கள்


உடலை சுத்தமா வைத்து கொள்ள உதவும் மற்றும் பழத்திடல் உள்ள நாற்சத்து உடலில் உள்ள டாக்ஸினை வெளியேற்றும். குறிப்பாக மலசிக்கல் உள்ளவர்களுக்கு பயன்படும்.


பப்பாளி இலையின் பயன்கள் 


நமது உடம்பில் உள்ள வைலஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி மலேரியா, டெங்கு காய்சல், புற்று நோய் மற்றும் ஆபத்தான நோய்களிமிருந்து நம்மை பாதுகாக்கிறது.



அன்றாடம் நாம் பப்பாளி அரலசாற்றினை குடித்து வருவதன் மூலம் உடல் சோர்வு பிரச்சனைகளை தடுக்கிறது. வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி, சரும பிரச்சனை போன்ற நோய்களை தடுக்கிறது.


மகசூல் விபரம் 


பால் மசூலானது, இரகம், பால் எடுக்கும் முறை, பருவம், மரங்களின் செழிப்பு மற்றும் சாகுபடி செய்யபடும் முறை போன்ற காரணங்களை சார்ந்து இருக்கும். ஒரு எக்டரிலிருந்து எனக்கு 2750 முதல் 3000 கிலோ வரை பால் கிடைத்தது. பால் எடுக்கபட்ட பப்பாளி காய்களை அறுவடை செய்து டுடிபுருட்டி எனப்படும் பேக்கரி அடுமானபொருள் தயார் செய்ய பயன்படுத்தலாம்.


அறுவடை 


பழங்களின் தோல் சற்று மஞ்சல் நிறம் ஆனதும் அறுவடை செய்யலாம்.


பப்பாளி சாகுபடி முறையில் எனது பொதுவான கருத்து


தற்போது குறைவான தண்ணீர் மற்றும் குறைவான பராமரிப்பு தேவைப்படும் பயிர்களைத்தான் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். அப்படி குறைந்ந பராமரிப்பில் நிறைந்த லாபம் தரும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது பப்பாளி. அதனால் தான் விவசாயிகளின் விருப்ப தேர்வாக இருந்து வருகிறது. 


பப்பாளி சாகுபடி அந்த வகையில் பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்து வந்தேன். தற்போது நான் 1 ஏக்கர் பரப்பில் ரெட்லேடி இரக பப்பாளியை சாகுபடி செய்துள்ளேன். நான் விளைவித்த பயிர்களில் பப்பாளி சாகுபடி அதிக மகசூல் மற்றும் நிறைந்த வருமானம் கிடைத்த பயிராக உள்ளது.



மொத்த செலவின தொகை 1,82,000/-


நடவு செலவு 10,000, பண்ணைக்கு உரம் மற்றும் எரு பயன்படுத்திய செலவீனம் 8,000, பூச்சி கொல்லி மருந்து செலவீனம் 4,000, வேலையாட்கள் கூலி 30,000


சொட்டு நீர் பாசண அமைப்பு 35,000, உர நீர் பாசணம் தொழில்நுட்பம் 20,000 மாட்டு கொட்டகை அமைப்பு 10,000, பண்ணை பராமரிப்பு செலவீனம் 30,000 நில மேம்பாடு 10,000, வேலி அமைத்தல் 25,000


லாபம் மொத்தமாக 2,11,000/-


நான் மாற்று பயிர் முறையை பயன்படுத்தி பப்பாளி சாகுபடி செய்த போது எனக்கு பப்பாளியில் பால் எடுக்கும் முறையில்


பப்பாளியில் பால் எடுக்கும் முறையில் 1 ஏக்கருக்கு 65000/-. பப்பாளி காய்களை பேக்கரிக்கு அடுமானப் பொருட்களாக டுட்டி–புருட்டி செய்ய கொடுத்த போது 45000/-. பப்பாளி பழமாக விற்பனை செய்த போது 25000/-


பப்பாளி இலைகளையும் விற்பனை செய்தேன் 20000/-. ஊடுபயிராக பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்த போது 12000/-. நிலக்கடலை சாகுபடி செய்த போது 28000/-. மாட்டு தீவன பயிர் சாகுபடி 8000. காய்கறி பயிர்கள் 8000/-


மொத்தமாக 2,11,000/-. எனக்கு லாபம் கிடைத்து 3 வருடத்திற்கு 6,33,000 வருமானம் கிடைத்தது. இத்தகவலை சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

 


மேலும் படிக்க....


நாட்டுக்கோழிகளில் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கும் தீவன மேலாண்மை முறைகள்!!


பண்ணை குட்டையில் உள்ள நன்மைகள் என்ன? எவ்வாறு பண்ணைக்குட்டைகளை அமைப்பது?


கிராம பஞ்சாயத்துகளில் 8 நாட்களுக்கு முகாம்! கிசான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post