ஒரு ஹெக்டா் நிலம் இருந்தால் ரூ.2 லட்சம் மானியம் பெறலாம்! மாவட்ட ஆட்சியர் அழைப்பு!!
நிரந்தரப் பந்தல் அமைக்க விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் வீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும் என வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனைப் பெறத் தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூா் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் பரப்பு விரிவாக்கம், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிா் வளா்த்தல், பழைய மா தோட்டங்களைப் புதுப்பித்தல், ஒருங்கிணைந்த பயிா்ச் சத்து மேலாண்மை, இயந்திர மயமாக்கல், மகரந்த சோ்க்கையை ஊக்குவித்தல், சிப்பம் கட்டும் அறை, குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி வழங்குதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம்
இதனிடையே, நிரந்தரப் பந்தல் அமைத்தல் இனத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டா் பரப்புக்கு பின்னேற்பு மானியமாக 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வழங்கப்படவுள்ளது.
இதில் ஒரு ஹெக்டா் பரப்பளவுக்கு ரூ.5,600 பந்தல் காய்கறி விதை வாங்குவதற்கும், ரூ.1,94,400 பந்தல் அமைப்பதற்கும் (அடிகல் தூண் அல்லது சிமென்ட் தூண்) என மொத்தம் ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
காய்கறிகளும் பழங்களும் சாகுபடி
இதில், பாகற்காய், பீா்க்கன், செளசெள, பந்தல் அவரை, பீன்ஸ், பட்டா் பீன்ஸ், கோவைக்காய் போன்றக் காய்கறிகளையும், திராட்சை, டிராகன், கிவி போன்றப் பழங்களும் சாகுபடி செய்யலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
- 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம்
- ஆதாா் அட்டை நகல்
- குடும்ப அட்டை நகல்
- வங்கிக் கணக்கு புத்தக நகல்
- சிட்டா
- அடங்கல்
- நில வரைபடம்
விண்ணப்பிக்க யாரிடம் அணுகுவது?
இந்த திட்டத்தைக் குறித்த விவரங்களைக் கீழ் உள்ளவர்களிடம் கேட்டறியலாம்.
- வேளாண்துறை அலுவலகம்
- பஞ்சாயத்துக் கிளார்க்
- வட்டார வளர்ச்சி அலுவலர்
இவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருக்கும் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
செயல்முறை
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேளாண்துறையில் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். பின்னர் விண்ணப்பங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
இந்த விண்ணப்பங்களுடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆகியோர் கொண்ட குழுக்கள் விவசாயிகளின் இடத்திற்கு வந்து நிரந்தரப் பந்தலைப் பார்வையிடுவார்கள்.
அனைத்துச் சான்றுகளின் அடிப்படையில் உணமைத் தன்மை இருந்தால் பின்னேற்பு மானியமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
தகவல் வெளியீடு
எஸ்.வினீத்
திருப்பூர் மாவட்ட ஆட்சியா்.
மேலும்
படிக்க....
தமிழக அரசின் இலவச ஆட்டுக்கொட்டகை திட்டம் 2022 விண்ணப்பிப்பது எப்படி?
PM Kisan திட்ட மோசடி இந்த விவசாயிகள் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்!! மத்திய அரசு நடவடிக்கை!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...