தமிழக அரசின் இலவச ஆட்டுக்கொட்டகை திட்டம் 2022 விண்ணப்பிப்பது எப்படி?
கால்நடை வளர்ப்பு தற்காலத்தில் வளர்ந்துவரும் தொழில் வகையாக இருக்கின்றது. விவசாயிகள், இயல்பு மக்கள் என அனைத்துத் தர்ப்பு மக்களும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபடுகின்றனர்.
கால்நடை வளர்ப்பு எனும் நிலையில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் முதலிய வளர்ப்புகள் இருக்கின்றன. இவற்றில் ஆடு வளர்ப்பு பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக வளர்க்கப்படும் கால்நடையாக அறியப்படுகின்றது.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் இவ்வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆடு வளர்ப்புக்கு அரசே இலவசமாகக் கொட்டகை அமைத்துத் தருகிறது என்பது கூடுதல் நன்மை.
அந்த வகையில் இலவச கொட்டகை திட்டத்தை எவ்வாறு பெறுவது என்பதைக் குறித்து இப்பதிவு விரிவாக விளக்குகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் ஆடு வளர்ப்பை முன்னெடுக்கும் நிலையில் ஆடு வளர்ப்புக்குத் தேவையான கொட்டகையைத் தமிழக அரசே அமைத்துத் தருகிறது.
இந்த திட்டம் சுமார் 2014 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் அடிப்படிஅயில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மானியம் பெற தகுதியுடையவர்கள் யார்?
முன்னரே ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆடு வளர்ப்பில் ஈடுபட விரும்பும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
மானியம் பெற தேவையான சான்றுகள்
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- நிலத்திற்கான பட்டா
- நில அடங்கல்
- இருப்பிடச் சான்று
- 100 நாள் வேலை அட்டை
யாரிடம் அணுகுவது?
இந்த திட்டத்தைக் குறித்த விவரங்களைக் கீழ் உள்ளவர்களிடம் கேட்டறியலாம்.
- பஞ்சாயத்துக் கிளார்க்
- கால்நடை மருத்துவர்
- சுய உதவிக் குழுக்கள்
- வட்டார வளர்ச்சி அலுவலர்
இவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருக்கும் விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
செயல்முறை
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கால்நடை துறையில் கொடுக்க வேண்டும்.அவர்கள் வாங்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். பின்னர் விண்ணப்பங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.
இந்த விண்ணப்பங்களுடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆவின் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழுக்கள் விவசாயிகளின் இடத்திற்கு வந்து பார்வை இடுவார்கள்.
அனைத்துச் சான்றுகளின் அடிப்படையில் உணமைத் தன்மை இருந்தால் கொட்டகை அமைக்க அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பித்த ஓரிரு மாதங்களில் கொட்டகை அமைத்துத் தரப்படும் எனக் கூறப்படுகிறது. விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.
மேலும்
படிக்க....
தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 மானியம் இன்று முதல் பதிவு செய்யலாம்!! உடனே விண்ணப்பியுங்கள்!!
ஒரு ஏக்கருக்கு 600 கிலோ மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள்!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...