E-Kyc சரிபார்ப்பை செய்து முடிக்காத விவசாயிகள் கவனத்திற்கு ரூ. 50 கட்டணம் செலுத்தி இந்த வசதியினை பெறலாம்!!


மத்திய அரசின் PM Kisan பயனாளிகள் தங்களுக்கான உதவித்தொகையை எளிதாகப் பெற ஏதுவாக, புதிய வசதி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நிதிச்சுமையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையிலும் அவர்களுக்கு உதவும் வகையிலும், மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.


விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 2018 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டம், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.



டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை அரசாங்கம் ரூ.2,000 ஐ தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 10 தவணைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது.


இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் வெளியிட்டார். 11வது தவணை விரைவில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட் உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை, எளிதாக பெற அஞ்சல் துறை புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.


இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சிவாஜிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் PM-KISAN என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 



இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் பயன்பெறுகிறாா்கள். இந்த விவசாயிகள் மே 31, 2022 க்குள் P.M .கிசான் இணையதளத்தில் ஆதாருடன், கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


கிராம அஞ்சல் ஊழியரை தொடா்புக் கொண்டு ரூ. 50 கட்டணம்


அப்போது, கைப்பேசிக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை தொடா்புக் கொண்டு ஆதாருடன் கைப்பேசி எண்ணை இணைக்கலாம். 



இதற்காக அவர்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சேவைக்கு ரூ. 50 கட்டணம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 


மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS


மேலும் படிக்க....


தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 மானியம் இன்று முதல் பதிவு செய்யலாம்!! உடனே விண்ணப்பியுங்கள்!!


விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!


PM-Kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இந்த வாரம் வரும் 11-வது தவணைத் தொகை!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post