தமிழக அரசு வழங்கும் ரூ.50,000 மானியம் இன்று முதல் பதிவு செய்யலாம்!! உடனே விண்ணப்பியுங்கள்!!


தமிழக அரசு நாட்டுக் கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க அரசு மானியம் வழங்குகிறது. அந்த மானியத்தை எவ்வாறு பெறலாம் என்பதைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.


அரசு விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கால்நடை வளர்ப்புக்கு என பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. கால்நடை வளர்ப்பில் குறிப்பிடத்தக்க வகையாக கோழி வளர்ப்பு இருக்கின்றது.



தற்போது உள்ள சூழலில் இறைச்சி அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. இறைச்சிக்கான தேவையும் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் அதிக லாபத்தினைப் பெறலாம். 


அதிலும் குறிப்பாக நாட்டுக் கோழி என்றால் அதிக அளவில் விற்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, அரசு தரும் மானியத்தினைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறும் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்ளலாம்.


நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க 25% மானியத்தினை தமிழக அரசு வழங்குகிறது. அடுத்த 25% மானியமானது, நபார்டு வங்கியின் சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது. ஆக, 50% மானியம் அரசு சார்பாகவே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50% தொகையை வங்கியில் கடனாகப் பெற்றுக் கொண்டு பண்ணைகளை அமைக்கலாம்.



மானியம் பெறத் தகுதி


விவசாயிகள், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் அல்லது தனிநபர் இந்த மானியத்தைப் பெறலாம். கோழிப் பண்ணை அமைக்கும் அளவிற்குப் போதிய நிலம் உள்ள அனைவரும் இம்மானியத்திற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.


புதியவராக இருந்தால் பயம் இல்லை


நீங்கள் இதுவரை கோழிப் பண்ணைக் குறித்த முன் அனுபவம் பெறாமல் இருந்தாலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு உள்ள புதிய விண்ணப்பதாரர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேவையான சான்றுகள்


  • ஆதார் கார்டு


  • வங்கி கணக்குப் புத்தகம்


  • குடும்ப அட்டை


  • 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை


  • நில உரிமை பத்திரம்


  • குடியிருப்புச் சான்று


  • சாதிச் சான்று


  • புகைப்படம் 2




மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS 


எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியிலிருந்து ஒரு ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றைப் பெற வேண்டும். அதன் பின், அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரிடம், இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்திச் செய்து கொடுக்க வேண்டும்.



இந்த மானியம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. அதோடு, அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாகச் செயல்படுத்தப் பட்டு வருகின்றது. எனவே, அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விவரங்களைக் கேட்டு முன்பதிவு செய்யுங்கள்.

 

மேலும் படிக்க....


கோழிகளுக்கு தடுப்பூசி மற்றும் மருந்திடும் போது கவனிக்க வேண்டிய செயல்முறைகள்! முழு விபரம் உள்ளே!!


நாட்டுக்கோழிகளில் வெப்ப அயர்ச்சியைக் குறைக்கும் தீவன மேலாண்மை முறைகள்!!


எளிய பராமரிப்பு, அதிக இறைச்சி, நிறைவான லாபம்!! அதிக லாபம் தரும் முயல் வளர்ப்பு!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post