பசுந்தாள் உரப்பயிர்களின் முக்கியத்துவம் மற்றும் கோடை உழவின் அவசியம்!!
இரசாயன உரங்கள் இல்லாத காலத்தில், பசுந்தாள் உரங்களை பெரிதும் பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சரியான அளவு இயற்கை உரங்களை இடுவதர் மண்ணின் வளம், பயிரின் உயர் விளைச்சல், தரமான சுற்றுப்புறச் சுழ்நிலை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.
கோடை மழையினை பயன்படுத்தி நிலத்தினை உழுது பசுந்தாள் பயிர்களான சணப்பை, தக்கை பூண்டு மற்றும் மணிலா அகத்தி ஆகியவை நெற்பயிரிடும் வயல்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பசுந்தாள் உரங்களின் சிறப்பியல்புகள்
தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துவதால் மண்ணின் வளத்தைப் பாதுகாக்கிறது. எளிதில் மக்கும் தன்மை உடையது.
மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்களை ஊக்குவிக்கிறது.மண்ணின் கட்டமைப்பை சீராக்குகிறது. மண்ணின் நீர்பிடிப்பு தன்மையினை அதிகரிக்கிறது.மண்ணின் வளம் நீடிக்கிறது.
இத்தகவலை நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், ஆர்.சுதா விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.
கோடை உழவின் அவசியம்
கோடை மழையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தினை அதிகரிக்கும் வகையில் கோடை உழவு செய்திடலாம். பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறும் மழை கோடை மழை எனப்படும். இதனை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்வது மிகவும் சிறந்தது.
கோடையில் மேல் மண் அதிகம் வெப்பமடையும், அந்த வெப்பம் கீழே சென்றால் மண்ணில் உள்ள நீர் ஆவியாகும். இதனை தவிர்த்திட மேல் மண்ணை உழுது ஒரு புழுதி படலத்தை ஏற்படுத்தி விட்டால் மண்ணில் உள்ள நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது.
கோடை உழவின் நன்மைகள்
மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண் அரிப்பினை தடுக்கிறது.மண் பொலபொலப்பாகிறது.
பூச்சிகளின் கூண்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றது. களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மண்ணின் அங்கக சத்து அதிகரிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் செயல்பாடு அதிகரிக்கிறது. மழைநீர் கீழே வழிந்து விடாமல் மண்ணிற்குள் செல்வதால் நிலத்தடி நீர் உயர்கிறது.
எனவே விவசாயிகள் கோடை உழவு செய்து பயனடையுமாறு நாகப்பட்டினம், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், ஆர்.சுதா தெரிவித்துள்ளார்.
மேலும்
படிக்க....
மாடி தோட்டத்தில் பயிர் பாதுகாப்பு மற்றும் பூச்சி, நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வழி முறைகள்!!
விவசாயிகளுக்கு ரூ.50,000 மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மேலும்
தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற
YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள்
மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும்
முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை
தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக
வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...