தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.27.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு! விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!
தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தமிழ அரசு செய்து வருகிறது. அரசு 2022-23ஆம் ஆண்டின் வேளாண் பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பை அதிகரித்து, விளைச்சலைப் பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் 2022-23ஆம் ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் பல்வேறு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.27.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
தோட்டக்கலை பயிர்கள்
சாகுபடிப் பரப்பை அதிகரிக்க விதைகளும், நடவுக் கன்றுகளும் விநியோகம் செய்யப்படுகின்றன. கத்தரி, மிளகாய், தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிப் பயிர்களில் குழித்தட்டு நாற்றுகளும், வெண்டை, முள்ளங்கி, கீரை, அவரை போன்ற காய்கறிகளில் விதைகளும் வழங்கி 7,100 ஏக்கரிலும், மா, கொய்யா, பப்பாளி, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பழங்களின் சாகுபடியினை 2,938 ஏக்கரில் அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மல்லிகை, கனகாம்பரம், செண்டுமல்லி, ரோஜா போன்ற மலர் வகைகளை 1,888 ஏக்கரிலும், கொத்தமல்லி, மஞ்சள், இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை போன்ற நறுமணப் பயிர்களை 1,375 ஏக்கரிலும் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தமாக 13,300 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பினை அதிகரிப்பதற்குத் தேவையான விதைகளும் நடவுக்கன்றுகளும் 40 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்வதற்காக ரூ.8.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS
மொத்தம் ரூ.27.50 கோடி நிதியில் தமிழக அரசு அறிவித்திருக்கும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். அதற்கு தாங்களாகவோ அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலமாகவோ tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.
மேலும் படிக்க....
ராபி பருவத்திற்கு விவசாயிகள் இந்த வங்கியில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்!!
விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் விண்ணப்பிக்க தோட்டக்கலைத்துறை அழைப்பு!!
வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.10,500 மானியங்கள் பெற அழைப்பு!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...