தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்!!


தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தகவல் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, நெம்மேலி, பாவாஜி கோட்டை, ஓலயகுன்னம், அண்டமி, கன்னியாகுறிச்சி, பெரியகோட்டை ஆகிய கிராமங்கள் உலக வங்கி கான நீர் ஆதார மேம்பாட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் பொருட்டு நெல் உளுந்து நிலக்கடலை மற்றும் மக்காச்சோளம் குதிரைவாலி போன்ற பயிர்களுக்கு 50% மானியத்தில் விதை முதல் உரத்துடன் கூடிய செயல் விளக்க திடல்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



மேலும் 50 செய்த மானியத்தில் பேட்டரி மூலம் இயங்கும் விசைத்தெளிப்பான்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மண்புழுஉர தொட்டி அமைப்பிலான தார்ப்பாய் தொட்டி தொட்டி அமைக்க தேவையான சவுக்கு குச்சி மற்றும் நிழல் வலை மற்றும் மண்புழுவுடன் ரூ.5000 மதிப்புள்ளது 50 சத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் கண்ட கிராமங்களுக்கான வேளாண் உதவி அலுவலகரை அணுகி பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கேட்டுக்கொள்கிறார்.






கீழக்குறிச்சியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் அவர்களுக்கு கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேசன் 50 சத மானியத்தில் விசைதெளிப்பான் வழங்கினார். உளுந்து பயிருக்கு ட்ரோன் மூலம் டீஏபி கரைசல் தெளிப்பு மதுக்கூர் வட்டாரம் ராமாம்பாள் புரம் கிராம பகுதியில் உளுந்து பயிருக்கு ட்ரோன் மூலம் விஐபி கரைசல் தெளிக்கப்பட்டது. இப்பகுதியில் உளுந்து பயிரானது தற்போது 30 முதல் 35 நாளில் பூக்கும் நிலையில் உள்ளது. பூக்கும் பருவத்தில் 15 நாள் இடைவெளியில் இருமுறை டிஏபி கரைசல் தெளிப்பதன் மூலம்  உளுந்து அதிக காய்வைப்பதோடு கூடுதல் மகசூலும் கிடைக்கிறது.


இத்தொழில்நுட்பத்தை அதிக அளவில் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் பொருட்டு  அட்மா திட்டத்தின் கீழ் ராமாம்பாள்புரம் தேர்வு செய்யப்பட்டு வேளாண் அலுவலர் இளங்கோ அட்மா கிட்ட வட்டார தொழில்நுட்ப அலுவலர் சுகிர்தா மற்றும் மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் கலந்து கொண்டு  பூக்கும் பருவத்தில் உள்ள உளுந்து பயிருக்கு  ட்ரோன் மூலம் டிஏபி உரக்கரைசல் தெளிக்கப்பட்டது.


விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்யும் அனைத்து கிராமங்களிலும் இத்தகு ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள் மேற்கொள்வதன் மூலம் அதிக மகசூல் பெற இயலும். மேலும் அரசு இத்தகைய திட்டங்களுக்கு கிராம வாரியாக தேர்வு செய்து மானியத்தில் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். வேளாண் அலுவலர் இளங்கோ மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பூமிநாதன் டி ஏ சி தெளிப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். 



தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியத்தில் வேளாண் இடுபொருட்கள்!!


மாநில மேலாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை இயற்கை விவசாயிகள் குழுவுக்கு லட்ச ரூபாய்க்கு சுழல் நிதி!!


நிலக்கடலை பயிரில் நிறைய மகசூலுக்கும் நிறைவான லாபத்திற்கும் ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்தி சாகுபடி செய்வீர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post