கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியத்தில் வேளாண் இடுபொருட்கள்!!


கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டம், அண்டமி பஞ்சாயத்தில் வேளாண் இடுபொருட்கள். வேளாண்மை இணை இயக்குனர் மானியத்தில் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் அவர்களின் அறிவுரைப்படி இன்றைய தினம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரகலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அண்டமி பஞ்சாயத்தில் வேளாண் இடுபொருட்கள்.... வேளாண்மை இணை இயக்குனர் மானியத்தில் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் அவர்களின் அறிவுரைப்படி இன்றைய தினம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின்அனைத்துகிராமவேளான் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஏழு பஞ்சாயத்துகளில் அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த முனைப்பு இயக்கம் நடைபெற்றது.






கூட்டத்தில் வேளாண் துறை தோட்டக்கலை துறை வேளாண் பொறியியல் துறை வருவாய் மற்றும் பேரிடர் துறை மற்றும் கால்நடை துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தங்கள் துறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு மானிய திட்டங்கள் மற்றும் தற்போதைய கோடைகால நெல் பயிர் பராமரிப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்த தொழில் நுட்பங்களையும் வழங்கினர். வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வார வேண்டிய கிளை கால்வாய்களின் விவரம் பஞ்சாயத்துகளில் பெறப்பட்டது.




வேளாண் துறை மூலம் 50% மானியத்தில் ஜிப்சம் ஜிங்க்சல்பேட் மற்றும் தார்பாலின் மற்றும் பண்ணை கருவிகளின் தொகுப்பு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளிடம் பெறப்பட்டு வழங்கப்பட்டது மேலும் கிசான் கடன் அட்டை தேவைப்படும் விவசாயிகளுக்கு கிசான் அட்டை பெறுவதற்கான படிவமும் வழங்கப்பட்டது இன்றைய தினம் அண்டமி கிராமத்தில் நடைபெற்ற கலைஞர் திட்டமேலாண்மை குழு கூட்டத்தில் தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர் அவர்கள் கலந்துகொண்டு அண்டமி பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு இலை சுருட்டு புழு மற்றும் நெல்வயலில்பாசி கட்டுப்பாடு குறித்த தொழில்நுட்பத் துண்டு பிரதிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.


மேலும் அண்டமியை சேர்ந்த விவசாயிகளுக்கு தார்பாலின் மற்றும் ஜிங்க்சல்பேட்டினை வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர் வழங்கினார். வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் கிசான் கடன் அட்டை படிவங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில் நுட்ப செயல் விளக்கங்கள் பற்றி கூறினார்.


அண்டமி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாஸ்கரன் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தங்கள் பஞ்சாயத்துக்கு தூர்வாரப்பட வேண்டிய கிளை வாய்க்கால்களின் விவரங்களை கூறினார். தோட்டக்கலை துறை அலுவலர் கண்ணன் பாமாயில் சாகுபடி மற்றும் 100% மானியத்தில் வழங்கப்படும் காய்கறி விதைகள் போன்றவை பற்றி கூறினார் கால்நடை மருத்துவர் சங்கர் கால்நடைகளை ஆய்வு செய்ததோடு கோடைகால கால்நடை பராமரிப்பு பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கினார் அண்டமி கிராம நிர்வாக அலுவலர் பட்டா மாறுதல் செய்ய விருப்பமுள்ளவர்கள் மனுக்களை வழங்கிட கேட்டுக் கொண்டார்.






வேளாண் அலுவலர் இளங்கோ கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாடி விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post