அட்மா திட்டத்தின் கீழ் தொழில் நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி!!



அட்மா திட்டத்தின் கீழ் தொழில் நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி!!


அட்மா திட்டத்தின் கீழ் கலைநிகழ்ச்சிகள் மூலம் தொழில் நுட்பங்களை பரவலாக்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டம், ஆவிகோட்டையில் நடைபெற்றது. வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கலாஜதா கலை நிகழ்ச்சி மூலம் தொழில்நுட்பம் பரவலாக்குதல் குறித்த நிகழ்ச்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆவிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க மானிய திட்டம், பயிர் காப்பீடு செய்தல், உளுந்து பயிருக்கு பூக்கும் தருணத்தில் டிஏபி தெளிப்பு செய்தல், நிலக்கடலை பயிருக்கு நுண்ணூட்டம் இடுதல் மற்றும் ஜிப்சத்தின் பயன்பாடு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



மேலும் தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ தாக்குதல் கண்டறிதல் மற்றும் இயற்கை முறையில் கட்டுப்படுத்துதல் குறித்த தொழில் நுட்பங்களை கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தற்சமயம் நமது வேளாண்மை துறையில் பண்ணை கருவிகள் இருப்பில் உள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் மானியத்தில் வாங்கி பயனடைய கேட்டுக் கொள்ளப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் திரு. முருகேஷ் வட்டார தொழில் நுட்ப மேலாளர் திருமதி.சி .சுகிதா உதவி தொழில்நுட்ப மேலாளர் மற்றும் திரு. அய்யாமணி பயிர் அறுவடை பணியாளர் அருள்மரியா ஆகியோர் செய்து இருந்தனர்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியத்தில் வேளாண் இடுபொருட்கள்!!


மாநில மேலாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை இயற்கை விவசாயிகள் குழுவுக்கு லட்ச ரூபாய்க்கு சுழல் நிதி!!


நிலக்கடலை பயிரில் நிறைய மகசூலுக்கும் நிறைவான லாபத்திற்கும் ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்தி சாகுபடி செய்வீர்!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments