வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா!!


வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டம் ஆவிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியில் ஆவிக்கோட்டை கிராமத்தை சார்ந்த முன்னோடி விவசாயி திரு. குணசேகரன் அவர்கள் தென்னையில் இயற்கை முறையில் சாகுபடி செய்தல் குறித்த தனது அனுபவத்தினை விவசாயிகளிடம் தெரிவித்தார்.


இப்ப பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமதி சி .சுகிதா அறுவடைக்கு பின் தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், உளுந்து மற்றும் தேங்காய் போன்ற பொருட்களை நேரடியாக விற்பனை செய்யாமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் பெறுவதோடு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.



வேளாண்மை உதவி அலுவலர் திரு .முருகேஷ் இயற்கை இடுபொருட்களான மீன் அமிலம் தயாரித்தல், அமிர்தகரைசல் தயாரிப்பு, இயற்கை பூச்சி விரட்டி, மற்றும் இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பு குறித்து எடுத்துரைத்தார்.மேலும் பாரம்பரிய நெல் சாகுபடியினை இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் செலவினம் முற்றிலும் குறைக்கப்பட்டு நெஞ்சில்லா உணவினை அனைவருக்கும் கிடைத்திடவும்.


பாரம்பரிய நெல் ரகங்கள் அழிவிலிருந்து பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. அய்யாமணி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம் வேளாண்மை அலுவலர் திரு .சப்தகிரி வாசன் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் திரு .அருள்மரியா ஆகியோர் செய்திருந்தனர்.


தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....


விஷமுள்ள நிலத்தையும் வசமாக்கும் தொழில்நுட்பத்திற்கான இடுபொருள் உற்பத்தி பயிற்சி!!


கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுக்களுக்கு பயிற்சி!!


விவசாயிகளுக்கான பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி!!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post