அட்மா திட்ட செயல் விளக்கங்கள் மற்றும் திட்ட பணிகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு!!



தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்ட செயல் விளக்கங்கள் மற்றும் திட்ட பணிகள் குறித்து வேளாண் துணை இயக்குனர் திடீர் ஆய்வு மதுக்கூர் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மண்புழு தொட்டிகள் காளான் வளர்ப்பு கிட்டுகள் நாற்றங்கால் தயாரிக்கும் பிளாஸ்டிக் டிரேக்கள் மற்றும் காட்டுப் பன்னிகள் விரட்டும் மருந்துகள் தல இரண்டு எண்கள் வரப்பெற்றது. இதற்கான விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வேளாண் துறை இயக்குனர் அய்யம்பெருமாள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.



மேலும் அத்திவெட்டி கிராமத்தில் தென்னை இயற்கை விவசாயிகள் குழு தலைவர் வைரவமூர்த்தி மற்றும் செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு மண்புழு உர தொட்டி வழங்கப்பட்டு விவசாயிகளுடன் செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.



மேலும் மதுக்கூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் மாண்புமிகு முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர விதைகள் வேளாண் துணை இயக்குனர் அய்யம்பெருமாள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பிஎம்கிசான் கிட்டத்தின் கீழ் புதிதாக பதிவு செய்துள்ள ‌ விவசாயிகளின் ஆவணங்கள் நேரடியாக விவசாயிகளிடம் ஆய்வு செய்யப்பட்டு பிஎம்கிசான் உதவி தொகை காண தகுதியினை ஆய்வு செய்தார்.


பின் குறுவை தொகுப்பு திட்ட பணிகளை வேளாண் உதவி உதவி அலுவலர்கள் தகுதியான விவசாயிகளுக்கு உரிய ஆவணங்களை பரிசீலித்து பின்னேற்பு மானியம் பெற ஆவண செய்ய கேட்டுக் கொண்டார். முன்னாடி விவசாயிகள் ஆலத்தூர் ஜெயஜோதி பாகம் பிரியாள் பெரிய கோட்டை இளமாறன் மதுரபாசணிபுரம் வெண்ணிலா அத்திவெட்டி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு சுரேஷ் தினேஷ் ராமு முருகேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா அய்யா மணி மற்றும் ராஜு செயல் விளக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேளாண் அலுவலர் இளங்கோ பிஎம்கிசான் திட்டத்துக்கான ஆய்வின்போது உடனிருந்தனர்.

தகவல் வெளியீடு

S.திலகவதி,

வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்

தஞ்சாவூர் மாவட்டம்.


மேலும் படிக்க....



விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி பூச்சிகளையும் பிடிக்கும் பூச்சிகளையும் கண்காணிக்கும்!!


விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து இடுபொருட்களும் 50 சத மானியத்துடன் முன்னுரிமை!!


பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்கள் பற்றிய வேளாண் கண்காட்சி !!


மேலும் தொடர்புக்கு....

 

எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.

 

மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.

 

நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......

வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)

 

Time to Tips – 5

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Post a Comment

0 Comments