ஊக்கத்தொகை பெற்று உளுந்து விதைக்கலாம் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் அறிவிப்பு!!
உயிர் உரங்கள் உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள் உளுந்து நுண்ணூட்டத்துடன் ஊக்கத்தொகை பெற்று உளுந்து விதைக்கலாம் வாங்க வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் அறிவிப்பு.
மதுக்கூர் வட்டாரத்தில் ரபிபருவத்தில் 700 எக்டர் வரை தனி பயிராகவோ வரப்பு பயிராகவோ தென்னையில் ஊடுபயிராகவோ உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மதுக்கூர் வட்டாரத்தில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அதிக அளவில் உளுந்து சாகுபடி விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறு குறு விவசாயிகளை உளுந்து சாகுபடி ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு ஏக்கருக்கு தேவையான எட்டு கிலோ உளுந்து வம்பன் 8 சான்று விதை வாடல் நோயை கட்டுப்படுத்தும் உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள் சூடோமோனஸ்/டி.விரிடி 3 கிலோ மற்றும் யூரியா மற்றும் சூப்பர் உர பயன்பாட்டை குறைக்க திரவ உயிர் உரம் ஒரு லிட்டர் மற்றும் உளுந்தில் அதிக பூக்கள் வைக்கவும் காய் பிடிக்கவும் தேவையான பயறு நுண்ணூட்டம் இரண்டு கிலோ அடங்கிய தொகுப்பு ரூபாய் 2066 மதிப்புடையது 50% மானியத்தில் வழங்கப்படுகிறது.
இத்துடன் விவசாயிகளுக்கு மீள ரூபாய் 500 ஊக்கத்தொகையாக பின்னேற்பு மானியத்தில் விவசாயிகள் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படுகிறது. பொதுத் தலைப்பில் 120 விவசாயிகளுக்கும் எஸ் சி பி தலைப்பில் 38 விவசாயிகளுக்கும் தற்போது மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில் அனைத்து இடு பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் மதுக்கூர் வட்டாரத்தின் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் சாகுபடி ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்பட்டு வருகிறது.
தேவைப்படும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு உளுந்து சாகுபடிக்கான அடங்கல் ஆதார் நகல் கம்ப்யூட்டர் சிட்டா மற்றும் வங்கி கணக்கு நகலுடன் எஸ்சிபி விவசாயிகள் ஜாதிசான்றுநகலுடன் வேளாண் உதவி அலுவலரை அணுகி பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுக்கூர் வேளாண் விரிவாக்க மையத்தில் பணமில்லா பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் விவசாயிகள் ஆன்லைன் மூலம் தொகை செலுத்தி ஒத்துழைப்பு வழங்கிட வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் கேட்டுக்கொள்கிறார். சிறப்பு மாற்றுப் பயிர் சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் மாநில வேளாண் வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விதை முதல் அறுவடை வரை உளுந்து சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிக்கு தேவையான அனைத்து இடுபொருட்களுடன் திட்டம் செயல்படுத்தப்படுவதால் ஒரு ஏக்கர் வீதம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகள் உளுந்து சாகுபடி மேற்கொண்டு குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் பெற வேண்டும் என வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் தெரிவித்துள்ளார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!
வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...