விவசாயிகளுக்கு மானியத்தில் நெல்-உளுந்து செயல் திடல்கள் அமைக்க வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்!!
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், பெரியகோட்டை மற்றும் கீழக்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் நெல்-உளுந்து செயல் திடல்கள் அமைக்க மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்.
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 4 ஆம் கட்ட நிலையில் பெரிய கோட்டை புளியக்குடி கன்னியாகுறிச்சி காரப்பங்காடு கீழக்குறிச்சி கிழக்கு கீழக்குறிச்சி மேற்கு ஒலய குன்னம் பாவாஜி கோட்டை ஆவி கோட்டை நெம்மேலி ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தற்போது கோடையில் திருந்திய நெல் சாகுபடி செய்து அதனைத் தொடர்ந்து உளுந்து சாகுபடியும் மேற்கொள்ளும் வகையில்,
பசுந்தாள் உர விதை முதற்கொண்டு நெல் விதை ஜிங்க்சல்பேட் சூடோமோனாஸ் அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர்உரங்கள்அசாடிராக்டின் வேம்பு பூச்சிக்கொல்லி மருந்து உளுந்து விதை 20 கிலோ யூரியா சூப்பர் பொட்டாசு உரங்கள்.
நெல்லிற்குப்பின் உளுந்து சாகுபடி செய்ய எக்டருக்கு 20 கிலோ உளுந்து விதை ஒரு எக்டருக்கு தேவையானவை விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து பயிர் பாதுகாப்பு மருந்துகளுடன் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
கீழக்குறிச்சி பகுதி விவசாயிகள் கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலரிடமும்
பெரிய கோட்டை சுற்றியுள்ள விவசாயிகள் பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலரிடம் தொடர்பு கொண்டு 50 சத மானியத்தில் இடுபொருள் பெற்று செயல் விளக்கதளை அமைத்திட வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் கேட்டுக்கொண்டார்.
மானியத்தில் செயல் விளக்கத் தளை அமைப்பதற்கும் இடுபொருள் பெறுவதற்கும் 1 எக்டருக்கு நெல் சாகுபடி அடங்கல் ஆதார் கம்ப்யூட்டர் சிட்டாவுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெரிய கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் நெல்-உளுந்து செயல் விளக்கத்திற்கான இடுபொருட்களை மானியத்தில் வழங்கினார். உடன் பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலர் தினேஷ்குமார் .
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!
வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...