தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு 7 லட்சம் மதிப்பில் மானியத்தில் இடுபொருள்!!
தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நூறு விவசாயிகளுக்கு 7 லட்சம் மதிப்பில் மானியத்தில் இடுபொருள் வழங்கிய வேளாண்மை துணை இயக்குனர் மாலதி.
தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் 100 எக்டருக்கு நிலக்கடலை செயல் விளக்கம் வழங்கப்பட்டது.
அதற்கான விதைகள் வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் 100 விவசாயிகளுக்கு ரூபாய் 12,900 விலையில் முழு விலையில் வழங்கப்பட்டு நிலக்கடலை விதைக்கான பின்னேற்பு மானியம் ரூபாய் 5000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இத்துடன் விவசாயிகளுக்கு தலா 12 .5 கிலோ நிலக்கடலை நுண்ணூட்டம் சூடோமோனஸ் மற்றும் ஒரு லிட்டர் அசாடிராக்டின் 100% மானிய விலையில் விவசாயிகளுக்கு விதையுடன் சேர்த்து வழங்கப்பட்டது .மேலும் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூபாய் 7000 மதிப்பில் 100% மானியத்தில் தார்ப்பாய் ஒன்று கடல்பாசி உரஜெல் 12.5 கிலோ மற்றும் ஆர்கானிக் திரவ பூஸ்டர் 1.5 லிட்டர் தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி மூலம் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
மத்திய அரசின் திட்ட விதிமுறைப்படி நிலக்கடலை சாகுபடி செய்துள்ள செயல் விளக்க விவசாயிகள் அனைவரையும் வேளாண் உதவி அலுவலர்கள் கிரிஷி மேப்பர் என்னும் மத்திய அரசின் செயலியில் பதிவேற்றம் செய்திட கேட்டுக்கொண்டார்.
ரபி பருவத்திற்கு 40 நிலக்கடலை செயல் விளக்கங்கள் உள்ளதை விவசாயிகள் வேளாண் உதவி அலுவலரை அணுகி முன்பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் சரவணன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ,ஜெரால்டு, சுரேஷ்,தினேஷ் மற்றும் ராமு செய்திருந்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி நன்றி கூறினார்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!
வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...