தஞ்சை மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை மற்றும் மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம் பெங்களூரு மூலமாக 22.9.25 அன்று வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் காட்டுத் தோட்டத்தில் இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தஞ்சாவூர், திருவையாறு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஒரத்தநாடு, திருவோணம் பேராவூரணி, சேதுபவா சத்திரம் மற்றும் அம்மாபேட்டை வட்டார இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இயற்கை வேளாண்மையில் மண்வள மேம்பாடு மற்றும் உயர் விளைச்சலுக்கான தொழில்நுட்பங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் ரகங்களின் மருத்துவ குணங்கள், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் , இயற்கை வழியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை , ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல், இயற்கை வேளாண்மை சான்றளிப்பு மற்றும் விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் தஞ்சாவூர் திரு.து. கோபாலகிருஷ்ணன் அவர்கள் பயிற்சிக்கு வருகை புரிந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகளை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.
மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம், பெங்களூரு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் . திருமதி.பூஜா கன்னோஜியா அவர்கள் பயிற்சியினை குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்து மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையத்தின் செயல்பாடுகள் மற்றும் நோக்கங்கள் குறித்தும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் திருமதி. ஜி. வித்யா அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் இயக்குனர் முனைவர். திரு கா. சுப்பிரமணியன் , ஈச்சங்கோட்டை டாக்டர். எம் .எஸ் .சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முனைவர் திரு. ஆர் .ஜகன் மோகன் , தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் திருமதி. வே சுஜாதா, வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம் ) திருமதி .ச .மாலதி, வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) திரு .எம். சாமுவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
வேளாண்மை உதவி இயக்குனர் போளூர் திரு . நாராயணமூர்த்தி, ஈச்சங்கோட்டை டாக்டர் எம் .எஸ் .சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பூச்சியியல் துறை பேராசிரியர் முனைவர். மதிராஜன், விதைச்சான்று அலுவலர், அம்மாபேட்டை திரு. கா. பிரபு ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உரை வழங்கினார்கள்.
பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். தா.பார்த்திபன் அவர்களால் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் காட்டுத்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விவசாய பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உரை வழங்கப்பட்டது மேலும் ஒருங்கிணைந்த பண்ணையத்தினை விவசாயிகளுக்கு கண்டுணர்வு செய்து தெளிவுபடுத்தப்பட்டது.
இப்பயிற்சியில் பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் விவசாயிகளின் சந்தேகங்கள் குறித்து விதை சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறை அலுவலர்கள் மூலமாக விளக்கமளிக்கப்பட்டது.
விதைச்சான்று அலுவலர் , பூதலூர் செல்வி . மகேஸ்வரி இயற்கை இடுப்பொருட்கள் தயாரித்தல் குறித்து செயல்விளக்கம் மூலம் செய்து காட்டினார்.
இப்பயிற்சியின் இறுதியாக தஞ்சாவூர், விதைச்சான்று அலுவலர், (தொ.நு) திருமதி எஸ் ஹசீனாபேகம் அவர்கள் நன்றியுரை கூறினார்.
தகவல் வெளியீடு
து.கோபாலகிருஷ்ணன்
விதை சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் தஞ்சாவூர்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...