சம்பா நடவு நெல் பயிர் வளர்ச்சியை குறுகச்செய்யும் பாசியினை கட்டுப்படுத்தும் காப்பர் சல்பேட்!!
தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல்
மதுக்கூர் வட்டாரத்தில் செப்டம்பர் முடிய 1100 எக்டேர் சம்பா நெல் சாகுபடி முடிந்துள்ளது. செப்டம்பர் மாத கடைசி 15 நாட்களில் நடவு செய்த இளம் பயிர்களில் வளர்ச்சி மிக குன்றி காணப்படுவதாக பெரிய கோட்டை மதுர பாசாணிபுரம் காடந்தங்குடி கோபாலசமுத்திரம் கிராம விவசாயிகள் தெரிவித்ததை தொடர்ந்து வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் சுரேஷ் மற்றும் தினேஷ் வேளாண் துணை அலுவலர் அன்புமணி ஆகியோருடன் விவசாயிகளின் வயலில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.
நடவு செய்து 15 நாட்கள் ஆன வயல்களில் பாசிகள் மிக அதிக அளவில் படர்ந்து இளம் பயிரின் வேர்கள் சுவாசிக்க இயலாத அளவிற்கு பாதித்துள்ளதால் இளம் பயிர்கள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள இயலாத நிலையில் இளம் பயிர்கள் காயத் தொடங்கியுள்ளது தெரியவந்துள்ளது.மேலும் ஒரு அடி ஆழத்துக்கு சேறாக உள்ள பகுதிகளில் நடவு செய்த பொழுது நெல்பயிரை 5 அங்குல ஆழத்துக்கு கீழ் நடவு செய்துள்ளனர் இத்தகைய வயல்களில் மூன்று நாட்களுக்குள் நெல் பயிர் எழும்ப முடியாததால் 15 நாட்களாக சேற்றுக்கு அடியில் இருந்து மெதுவாக வளர்ந்து கிளை வெடிக்க வேண்டிய நேரத்தில் மண்ணுக்குள்ளேயே தன்னை காத்துக் கொள்ள புதிய வேர்களை மட்டுமே கணுக்களில் உருவாக்கியுள்ளது.
இந்த நாள் மண்ணுக்கு மேல் காணப்படும் பயிரில் கிளை வெடிப்பும் இல்லாத நிலையில் உள்ளது. அதிக அளவில் தற்போது நெற்பயிரை பாதிக்கும் பாசி கட்டுப்பாடு குறித்து விவசாயிகளின் நேரடியாக களத்தில் சந்தித்து பாசியின் விளைவு மற்றும் வயலில் பாசியை கட்டுப்படுத்துவதற்கான காப்பர் சல்பேட் இடும் முறைகளை வேளாண் உதவி இயக்குனர் விளக்கி கூறினார். தற்போது மதுக்கூர் வட்டாரத்தில் பெரிய கோட்டை கீழக்குறிச்சி இளங்காடு சிரமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல்தண்ணீர் பயன்படுத்தும் வயல்களில் அதிக அளவில் பாசியின் வளர்ச்சி காணப்படுகிறது.
மண்ணில் அதிக சத்துள்ள இடங்களிலும் அதிக வெளிச்சம் உள்ள இடங்களிலும் பாசியின் வளர்ச்சி அதிகளவில் காணப்படுகிறது. மேலும் நீர் உவர்நீராக உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் நெல்லுக்காக இடும் டிஏபி மற்றும் சூப்பர் உரங்களை அதிக அளவில் பாசி எடுத்துக்கொண்டு பயிரின் வளர்ச்சி நலிந்து காணப்படும்.
ஒவ்வொரு நெல் குத்தை சுற்றிலும் பாசி அடர்ந்து வேரின் காற்றோட்டத்தை முற்றிலும் தடுத்து விடுவதால் வேரின் வளர்ச்சி குறைந்து மண்ணில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதால் நெல் பயிர் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும். பாசியின் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு இரண்டு கிலோ காப்பர் சல்பேட்டினை வாங்கி பழைய வேட்டி துணிகளில் 100 கிராம் வீதம் சிறுசிறு பொட்டலங்களாக கட்டி ஏக்கருக்கு 10 முதல் 20 இடங்களில் ஆங்காங்கே போட்டு விட வேண்டும்.
காப்பர் சல்பேட் நீரில் கரைந்து அதை சுற்றியுள்ள இடங்களில் உள்ள பாசி முழுவதையும் கட்டுப்படுத்துவதோடு மேலும் பாசியின் விதைகளையும் கட்டுப்படுத்தும். காப்பர் சல்பேட் தெளித்த கையோடு வரிசை நடவு செய்துள்ள வயலாக இருக்கும் பட்சத்தில் மரக்குச்சி வறண்டிகளை பயன்படுத்தி பாசியை ஒரு பக்கமாக ஒதுக்கி வெளியேற்ற வேண்டும். டிஏபி உரம் இடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
பாசியின் வளர்ச்சி மேலும் தென்பட்டால் 15 நாள் கழித்து மீள் காப்பர் சல்பேட் இட்டு கட்டுப்படுத்தலாம். என்பதை வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் கேட்டுக்கொண்டார்.
பாசி பாதித்த 15 நாள் நெல்நடவுபயிர்
காடந்தங்குடி கிராமத்தில் விவசாய வேலாயுதம் வயலில் பாசி பாதித்த நெல்பயிரை மதுக்கூர்வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் உடன் ஆய்வு செய்து பாசி கட்டுப்பாட்டு மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கினார்.
பாசிபாதித்த நெல் பயிரில் இளம் இளம் வேர்கள் பாசியால் சூழப்பட்டு சுவாசிக்க இயலாமையால் சிறிது சிறிதாக பழுப்பு நிறமாக மாறி பின் இறந்துவிடும். ஆழமாக நடப்பட்ட நெல்பயிரும் கிளை வெடிக்காமல் கணுக்களில் வேர் மட்டும் தோன்றி கிளைவிடாமல் தூர் வெடிக்காமல் இருக்கும்.
தகவல் வெளியீடு
S.திலகவதி,
வேளாண்மை உதவி இயக்குனர், மதுக்கூர்
தஞ்சாவூர் மாவட்டம்.
மேலும் படிக்க....
மதுக்கூர் வட்டார வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண்மை இயக்குனர் சுஜாதா ஆய்வு!!
வளமான பயிரை உருவாக்கி நஞ்சில்லா உணவளிக்கும் உழவர் வயல்வெளி பள்ளி!!
விதைப் பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்திட விவசாயிகளுக்கு பயிற்சி!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடர்ந்து காணுங்கள்.
மேலும் விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் பயனாளர்கள் அனைவரும் நமது வாட்சப் குரூப்பில் இணைத்து விவசாய தகவல்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள்.
நமது வாட்சப் குழுவில் சேர இந்த லிங்க்கை தொடுங்கள் நன்றி......
வாட்சப் குழு சேர் (Joint WhatsApp Group use below link)
Time to Tips – 5
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
0 Comments
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...