சிறந்த முறையில் பால் பண்ணை பராமரிப்பு மற்றும் மாடுகளின் நலனை பெருக்குவது எப்படி?




சிறந்த முறையில் பால் பண்ணை பராமரிப்பு மற்றும் மாடுகளின் நலனை பெருக்குவது எப்படி?


பால் பண்ணை வைத்திருப்பவர்கள், பின்வரும் 5 விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இதனைக் கடைப்பிடித்தால், பண்ணையை வெற்றிகரமாக நடத்துவதுடன், கூடுதல் லாபமும் ஈட்ட முடியும்.


புதுப்புது நோய்கள்


மனிதர்கள் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி, புதுவிதமான நோய்கள் வந்துகொண்டேதான் இருக்கும்.அதனால் ஆடு, மாடு போன்றவற்றின் சுகாதார நிலையை அடிக்கடி கண்காணிப்பது முக்கியம். எனவே ஒரு பால் பண்ணையை வெற்றிகரமாக நடத்தவேண்டுமென்றால் நாம் மேற்கொள்ளும் சோதனைகள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.



உடல்நலக்குறைவு


உடல்நலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவது பிரச்சினையின் ஆரம்பக் கட்டங்களில் சரியான நடவடிக்கை எடுக்க உதவும். ஒரு கால்நடைக்கு எப்போது வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அத்தகைய சூழலில், கால்நடை மருத்துவரை அணுகவேண்டியதுக் கட்டாயம். சில சமயம் அதிகம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வர சில காலம் பிடிக்கும் , அதே சமயம் பால் உற்பத்தி பாதிக்கப்படும்.


5 வகை சோதனைகள்


நோய் அதிகமானால் கால் நடை இறந்து போகவும் வாய்ப்புள்ளது . இதையெல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாடுகளைச் சோதனைக்கு உட்படுத்துவது அவசியமாகிறது. இதில் முக்கியமானது 5 வகை சோதனைகள்.


1. சாணத்தில் ஒட்டுண்ணி சோதனை


இது நாம் செய்யவேண்டிய சோதனைகளில் மிகவும் கட்டாயமான சோதனை இது. மூன்று முதல் நான்கு மதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக செய்ய வேண்டும். உடலுக்குள் இருக்கும் ஒட்டுண்ணிகள் எப்போதும் பால் விலங்குகளின் ஊட்டச்சத்துடன் போட்டியிடுகின்றன. முக்கியமாக ரவுண்ட் வார்ம்கள் மற்றும் டேப் புழுக்கள் இருக்குமே தவிர, வேறு சில வகையான எண்டோ ஒட்டுண்ணிகலும் கால்நடைகளின் உடலுக்குள் காணப்படுகின்றன.


2. பால் காம்புகளுக்கான சோதனை


மாடுகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று . பால் சுரப்பு திடீரெனக் குறையும் வரை இந்நோயின் தாக்கத்தைக் கண்டறிய இயலாது.



அறிகுறிகள் என்று பார்த்தல் காம்பில் வேர்க்கும் , காய்ச்சல் இருக்கும். நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் சோமாடிக் செல்கள் பாலில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. பண்ணையில் இதனை சோதனை செய்ய அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் இந்த சோதனையைச் செய்ய ரெடிமேட் கிட் மற்றும் கிடைக்கின்றன.


3. நீர் பரிசோதனை


ஒரு மாடு ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்கு குறைந்தது 5 லிட்டர் நீர் பருக வேண்டும். நீரில் PH 5.1 க்கு குறையாமலும் PH 9க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் பால் உற்பத்தி குறையவும் பாலின் சுவையும் குறையும்.


4. தீவனம் மற்றும் தீவனத்திற்கான சோதனைகள்


மாட்டிற்கு கொடுக்கும் உணவு தரமானதாக இருப்பது நல்லது. ஏனெனில் அதுதான் மாட்டின் உடல் நலத்தையும் மற்றும் பால் வளத்தையும் பெருக்கும். இதுதான் பால் பண்ணையை லாபத்தில் இயங்குகிறதா? அல்லது நஷ்டத்தில் இயங்குகிறதா? என்பதைத் தீர்மானிக்கும்.எனவே வெளியில் இருந்து தீவனங்களை வாங்கினால் அதை ஆய்வகத்தில் கொடுத்து தரத்தை சோதனை செய்வதும் கட்டாயமாகிறது.



5. ப்ரூசெல்லோசிஸ் சோதனை


கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் பால் மந்தைகளில் கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதைக் கண்டறிந்தால் ப்ரூசெல்லோசிஸ் (Brucellosis) நோயைப் பரிசோதிப்பது அவசியம். ஒரு பண்ணையிலிருந்து புதிதாக மாடு வாங்கினால் அந்த மாட்டிற்கு இந்த நோய் இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேண்டும்


நாய்கள், ஈக்கள், காட்டுப் பறவைகள் போன்றவற்றில் இருந்து இந்த நோய் பரவுகிறதா? என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளதால், இந்நோய் தாக்கிய மாடுகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும்.

Post a Comment

1 Comments

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...