சிறு, குறு விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் மேலும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான விதிமுறைகள் என்ன?


பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் பெறுவதற்கு விண்ணங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா். 


தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



50 சதவீத மானியம்


அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன், அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மானியம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.


நிபந்தனைகள்

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரா் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா, அடங்கல் நகல், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


எங்கு விண்ணப்பிக்க வேண்டும்


தகுதியுள்ள விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.


பிற்படுத்தப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறு அமைக்க கடைபிடிக்க வேண்டிய விதிகள்; அனுமதியின்றி அமைத்தால் தண்டனை என்ன?


மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதிலும் விதிமுறைகளை வகுத்துள்ளது. 



அதனை மீண்டும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அதனால், ஆழ்துளை அமைப்பது அதை மூடுவது பற்றி விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரசீது பெறுவது அவசியம்.


ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி பெற்ற பிறகு,


1. முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே கிணறு தோண்ட வேண்டும்.


2. தோண்டும்போது உணவு, ஓய்வு ஆகியவற்றுக்கு இடைவெளி விடும்பட்சத்தில், ஆழ்துளை குழியை தற்காலிகமாக மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


3. பணி நடக்கும் பகுதியைச் சுற்றில் முள்வேலி கம்பி அல்லது தடுப்பு அமைத்தல் கட்டாயம்.


4. தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளை கிணறை முறையாக மூட வேண்டும்.


5. நிலம் பழைய நிலைக்கு திரும்பும் வகையில் சீர்படுத்த வேண்டும் என்ற விதி சட்டத்தில் உள்ளது.



6. ஆழ்துளை அமைக்கப்பட்ட பகுதியை உறுதியான இரும்பு தகடு கொண்டு மூடவேண்டும். மூடியை கொண்டு மூடும்பட்சத்தில் நட்டு, போல்ட் ஆகியவை கொண்டு இறுக்கமாக மூடியை கட்ட வேண்டும்.


7. ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகும் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.


8. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்த கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனை தோண்டிய நபருமே பொறுப்பேற்க வேண்டும்.


9. பதிவு செய்யாமல், அனுமதி இன்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால், 1920 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 316 A பிரிவின்படி, அபராதத்துடன் கூடிய 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post