தமிழக அரசின் இலவச ஆடு மாடு கொட்டகை அமைக்கும் திட்டம்.!!
விவசாயம் பொய்த்துப்போகும்
காலங்களில், விவசாயிகள் தங்கள் வருமானத்தைப் பெருக்குவதற்காக, கிராமப்புறங்களில், ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகின்றனர். இதன்மூலம் பொருளாதாரத் தேவையைப்
பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. இதற்காக
பல்வேறு திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அப்படியொரு திட்டம்
தான் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம். இத்திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு
உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 2,
3,5,9 மாடுகள் என பல்வேறு பிரிவுகள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம்
பயன்பெற ஊரக வேலைவாய்ப்பு ஊறுதித் திட்ட அட்டை வைத்திருக்க வேண்டியது அவசியம். இதன்
படி பயன்பெற சுயஉதவிக் குழுக்களையோ, பஞ்சாயத்து கிளார்க், கால்நடை மருத்துவரையோ அல்லது
நேரடியாகத் திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ (Scheme BDO) ஆவின் பால்
சங்கத்தையோ விவசாயிகள் அல்லது மாடு வளர்க்க விரும்புவோர் அணுக வேண்டும்.
கொட்டகை வகைகள்
இரண்டு மாடுக்
கொட்டகை 98 ஆயிரம் ரூபாய் செலவிலும், 3 மாடுகளைக் கொண்ட கொட்டகை 1,20,000ரூபாய் செலிவிலும்
அமைத்துத்ததரப்படுகிறது. இதுபோல் கொட்டகை அமைக்க அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை தமிழக
அரசால் வழங்கப்படுகிறது.
தகுதி
ஏற்கனவே மாடு
வளர்த்துவருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில்
பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை அறிக்கப்படும். இதைத்தவிர மாடு வளர்க்க
ஆசைப்படும் அனைவருமே விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும்
ஆவணங்கள்
1.சொந்தமாக
நிலம் வேண்டும்.
2.சாப்கார்டு
ஏற்கனவே போட்டதாக இருக்க வேண்டும்.
3.ஆதார் அட்டை.
4.வாக்காளர்
அடையாள அட்டை.
5.கம்ப்யூட்டர்
சிட்டா.
ஆண்டுதோறும்
ஏராளமானோர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். எனவே விவசாயிகள் தவறாமல் இந்தத்
திட்டத்தைப் பயன்படுத்தி பயனடையலாம். விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு,
அரசின் மூலம், இலவச கொட்டகை அமைக்கும் பணியை, செயல்படுத்த கால்நடை துறை முடிவு செய்துள்ளது.
முதல்வர் அறிவிப்பு
ஆடு, மாடு மற்றும் நாட்டுக் கோழிகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, அரசின் மூலம், இலவச கொட்டகை அமைத்து தரப்படும் என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், கடந்த ஜூலை 25ம் தேதி அறிவித்தார். இத்திட்டம், முதன் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான அரசாணையை வெளியிட்டு, கால்நடை மருந்தகங்கள்,
கிளை நிலையங்கள் மூலம், விவசாயிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விவசாயிகளிடம்
இருந்து கால்நடை துறையினர் வாங்கி, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். பின்னர்,
அந்த விண்ணப்பங்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பங்களை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆவின் துறை உதவி ஆய்வாளர் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு, விண்ணப்பித்த விவசாயிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கால்நடைகள் வளர்த்து வருகிறார்களா, வீட்டருகே கொட்டகை அமைக்க போதிய சொந்த நிலம் உள்ளதா என, ஆய்வு செய்யும். பின்னர், தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து, திட்ட அலுவலர் மூலம், ஆட்சியருக்கு அனுப்பி, நிர்வாக அனுமதி பெறப்படும்.
கொட்டகை அமைக்கும் பணியில், நுாறு நாள்
தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். மேலும், ஊராட்சி நிர்வாகம் கொட்டகை அமைக்கும் பணியை,
வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையிடுவார். பணிகள் முடிந்தபின், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம்
கொட்டகை ஒப்படைக்கப்படும்.
ஆவின் துறை
மூலமும்
மாட்டு கொட்டகை அமைப்பதற்கு, இரண்டு மாடுகளுக்கு, 79 ஆயிரம் ரூபாய் என, மாடுகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, அதிகபட்சமாக 10 மாடுகளுக்கு, 2.15 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஆவின் துறை மூலம், பயனாளிகளுக்கு, 200 மாடுகள் வழங்கப்படும்.
அதே போல், 10 ஆடுகளுக்கு, 85 ஆயிரம் ரூபாய் என, எண்ணிக்கைக்கு
ஏற்றவாறு 30 ஆடுகள் வரை, 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.இதே போல், 100 நாட்டுக் கோழிகளுக்கு
77 ஆயிரம் ரூபாய் என, அதிகபட்சமாக 250 கோழிகளுக்கு, 1.03 லட்சம் ரூபாய் கொட்டகை அமைக்க
இலவசமாக வழங்கப்படும்.
தமிழக அரசின் இலவச ஆடு மாடு கொட்டகை விண்ணப்பபடிவம் PDF....
பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...