இயற்கை முறையில் கோழி வளர்க்க சில வழிமுறைகள்


அசைவத்தில் அதிக புரதச்சத்து உள்ள இறைச்சி எதுவென்றால் அது கோழிதான். அதனால்தான், விவசாயம் சார்ந்த தொழில்களில் முக்கிய இடம்பிடிப்பது கோழி வளர்ப்பு.



இயற்கை இறைச்சி


அதிலும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கோழி இறைச்சியின் தேவை நாளுக்கு தான் அதிகரித்துககொண்டே போகிறது. குறிப்பாக இயற்கை விவசாயத்தின் மீது மக்களின் கவனம் திசை திரும்பியிருப்பதால், இறைச்சியிலும் இயற்கை இறைச்சியை தேட ஆரம்பித்துவிட்டார்கள்.


ஆர்கானிக் கோழி இறைச்சி


அந்த அளவுக்கு பலமான விழப்புணர்வு உருவாகி வருவது வரவேற்கத்தக்க விஷயம். இந்தியாவை தவிர்த்து கிட்டத்தட்ட 130 நாடுகளில் ஆர்கானிக் கோழி இறைச்சி தேவையோ அல்லது தட்டுபாடோ இருக்கிறது


எனவே மத்திய அரசு ஆர்கானிக் கோழி வளர்ப்பிற்கு ஊக்குவிக்க ஒரு கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. ஆர்கானிக் முறையில் பிராய்லர் கோழி வளர்த்தால் ஒரு விலை, அதுவே நாட்டுக்கோழி வளர்த்தால் சற்று கூடுதல் விலை


சற்று முன்னோக்கி சென்று, ஏற்றுமதி செய்தால் ஒருவிலை என கோழிகளின் விலையும் முற்றியலும் மாறுபடுகிறது. எனவே இயற்கை முறையில் கோழி வளர்ப்பது எப்படி மற்றும் சான்றிதழ் வாங்குவது எப்படி என்று பார்ப்போம்.


இயற்கை முறையில் கோழி வளர்ப்பு


இதில் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை. பிரம்ம ரகசியமும் இல்லை. ஒரு கோழியை நீங்க எப்பவும் எப்படி வளர்ப்பமோ, அப்படித்தான் இயற்கை முறை வளர்ப்பிலும். ஆனால் ஒரு சில விஷயங்களை மட்டும் மாற்றிக் கையாளவேண்டும்.


ஒவ்வொன்றையும் பதிவு செய்தல்


ஆர்கானிக் சான்றிதழ் சோதனை செய்ய வரும்பொழுது (ஒருதடவை தேதி சொல்லிவிட்டு வருவார்கள் அடுத்தமுறை சொல்லாமல் திடிரென்று வந்து சோதனை செய்வார்கள் ) முதலில் பார்ப்பது ஆவணங்களைத்தான். இரண்டு ஷெட் வைத்திருந்தால் இரண்டிற்கும் தனி தனி ஆவணங்கள் வைத்திருப்பது நல்லது.


1. தாய் கோழி எங்கே வாங்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் மற்றும் விவரம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.


2. உங்கள் பண்ணையை பற்றிய விவரங்கள் இருக்க வேண்டும்.


3. என்ன கோழி ரகம்.


4. என்ன வகையான உணவு.


5. நீங்களே உற்பத்தி செய்கிறீர்களா அல்லது வெளியிலிருந்து வாங்குகிறீர்களா அது இயற்கை உணவா அல்லது அதற்கு அங்கக சான்றிதழ் உள்ளதா போன்ற விவரங்கள் வேண்டும்.


6. பண்ணையில் பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றிய விவரங்கள் இருக்கவேண்டும்


7. உற்பத்தி மற்றும் விற்பனை பதிவு இருக்க வேண்டும்.



கோழி வளர்க்க கூடிய இடம்


1. கோழியை கூண்டில் வைத்து வளர்க்கக்கூடாது . நல்ல பெரிய கொட்டகை இருந்தால் நல்லது.


2. இயற்கை சூழ்நிலைலயில் கோழியை நீர் அருந்த வைக்க வேண்டும். டப்பாவில் வைத்தால் அடிக்கடி சுடுநீரில் சுத்தம் செய்ய வேண்டும்.


3. கோழி வளர்ப்பு கூடாரத்தின் தரை பகுதி நல்ல திடமான கட்டுமானமாக இருக்க வேண்டும் மேலே வைக்கோல் அல்லது மணல் இருக்கலாம்.


4. அதே சமயம் தரைதளம் சற்று நீளமானதாக இருக்கவேண்டும். இது கோழிகள் உட்காருவதற்கோ அல்லது படுப்பதற்கோ உதவும்.


5. மேலும் கோழிகள் உள்ளே செல்வதற்கும் வருவதற்கும் தனி வழி வைக்கவேண்டும்.


6. ஆர்கானிக் முட்டையும் உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் பகல் பொழுது நீண்டதாக இல்லாத சமயத்தில் லயிட் (Light)வெளிச்சத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம்.


7. கொட்டகையில் வளர்த்தாலும் , வெளியில் வளர்த்தாலும் கோழிகள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்க வேண்டும்.


8. வெளியில் வளர்க்கும்பொழுது கோழிகள் வளரும் பகுதி தாவரங்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும்.


9. நீர் வசதியை மறக்காமல் செய்து கொடுக்கவேண்டும்.



கோழிகளுக்கான உணவு


1. கோழிகளுக்கான உணவு அங்கக சான்றிதழ் பெற்றதா என்பதை கவனித்து வாங்குங்கள்


2. அதற்கான ஆவணத்தையும் பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்


3. கோழி மேய்ச்சலுக்கு செல்லும் இடங்கள் பூச்சி கொல்லிகள் அடிக்காமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


4. கோழி மேய்ச்சல் இடங்களில் மூலிகை தாவரங்கள் வளர்க்கலாம்.


5. இது நல்ல உணவாவதுடன் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post