ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்!


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதால், நெல் கொள்முதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வேளாண்துறை அறிவுறுத்தல்


கோடையை மழையைப் பயன்படுத்தி உழவு செய்ய வேண்டும் எனவும், கோடை உழவு கோடி நன்மை தரும் எனவும் வேளாண் துறை அறிவுறுத்தியது.


நெல் சாகுபடி


இதன் அடிப்படையில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. பயிர் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாரானதால், தற்போது அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.


நெல் கொள்முதல் நிலையங்கள்


தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் அறுவடை பணிகள் நடைபெறுவதால், இதனைக் கருத்தில் கொண்டு 193 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தது.


10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேக்கம்


போதிய இடம் பற்றாக்குறை காரணமாக தஞ்சாவூர் அருகே காட்டூர், வாண்டையார் இருப்பு, சடையார்கோவில், நெய்வாசல், பொன்னாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் தலா, 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. போதிய இடமில்லாமல், கொள்முதல் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறியதாவது


கொள்முதல் நிலையங்களில் உள்ள, நெல் மூட்டைகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பாமல், சேமிப்புக் கிடங்கில் உள்ள மூட்டைகள், வெளிமாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.


கொள்முதல் பணி தற்காலிக நிறுத்தம்


இதன் காரணமாக கொள்முதல் நிலையங்களில் போதிய இடமில்லாததால், கொள்முதல் பணியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். என்று தெரிவித்து உள்ளனர்.


தார்பாய்கள் பற்றாக்குறை


நிர்வாகம் போதுமான தார்பாய்கள் வழங்காததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


விவசாயிகள் அதிர்ச்சி


கொள்முதல் நிலையங்களில் வந்த இச்செய்தி விவசாயிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.




விவசாயிகள் வேதனை


வங்கிக் கடன் வாங்கி சாகுபடி செய்ததுடன், புயல், மழை, சூறாவளிக்காற்று, வெள்ளம் என பல்வேறு தடைகளைத் தாண்டி நெற்பயிர்களை அறுவடை செய்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, தங்கள் வாழ்வாதாரத்திற்கே கேள்விக்குறியாக மாறியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.


அதிகாரிகளுக்கு கோரிக்கை


இந்த விஷயத்தில் அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் சரிவர செயல்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க....


குறுவை பருவ நெல் சாகுபடி பரப்பினை அதிகரிக்க 50% மானியத்தில் வேளாண் இடுபொருட்கள்! உடனே பயன்பெறுங்கள்!


வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தமிழக அரசு அதிரடி!!


ஐஸ்கிரீம் சுவை கொண்ட நீல நிற வாழைப்பழம்!! உலகில் புதியதோர் வாழை இனம்!!


மேலும் தொடர்புக்கு....


எங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

 

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post