100% மானியத்தில்
குறுவைத் தொகுப்புத் திட்டம் - பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அழைப்பு!
குறுவைத் தொகுப்புத்
திட்டம்
நாகப்பட்டினத்தைச்
சேர்ந்த விவசாயிகள் குறுவை தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை அழைப்பு
விடுத்துள்ளது. இது குறித்து நாகை
வேளாண் உதவி இயக்குநர் ச.லாரன்ஸ் பிரபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதல்வர்
அறிவிப்பு
2021ம்
ஆண்டில் குறுவை பருவ நெல் சாகுபடி
பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தவும் குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர்
அறிவித்துள்ளார்.
2 ஏக்கர் வரையில்
விவசாயிகள் பயன்பெறலாம்
இத்திட்டம்
டெல்டா பகுதிகளில் உள்ள அனைத்துக் குறுவை
சாகுபடி செய்யும் கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. குறுவைத் தொகுப்பு திட்டத்தில் விதைநெல், உரங்கள், பசுந்தாள் உர விதைகள் ஆகியவை
மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை விவசாயிகள் பயன்பெறலாம்.
குறுவைத்
தொகுப்பு திட்டம்
தமிழக
அரசின் 2021-22ம் ஆண்டுக்கான குறுவைத்
தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகளும், 100 சதவீத
மானியத்தில் பசுந்தாள் விதைகளும், ரசாயன உரங்களும் வழங்கப்படுகின்றன.
20 கிலோ
விதை நெல் 50% மானியத்தில்
இந்தக்
குறுவை தொகுப்பு திட்டத்தில் ஏக்கர் ஒன்றுக்கு விதை நெல் 20 கிலோ
50% மானிய விலையில் வழங்கப்படும். இதேபோல் ரூ1400 மதிப்புள்ள 20கிலோ பசுந்தாள் உர
விதைகளும், ரூ.2185 மதிப்புள்ள உரங்களான யூரியா 2 மூட்டை, டி.ஏ.பி
1 மூட்டை மற்றும் பொட்டாஷ் அரை மூட்டையும் வழங்கப்படும்.
ஆன்லைனில்
விண்ணப்பம்
குறுவைச்
சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மானியம் பெற இணையவழியில் அல்லது
வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு
உரிய ஆவணங்களுடன் வந்து பதிவு செய்தும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேவைப்படும்
ஆவணங்கள்
இத்திட்டத்தில்
பயன்பெற விரும்பும் நாகை வட்டார விவசாயிகள்,
கிராம நிர்வாக அலுவலரின் சான்று, சிட்டா அடங்கல் மற்றும் ஆதார் அட்டை நகல்களைப் பெற்று உழவன் செயலியில் தாங்களாகவே அல்லது நாகை வேளாண் உதவி
இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தொடர்புகொள்ள
வேண்டிய தொலைபேசி எண்
மேலும்
விவரங்களுக்கு 97159
62008 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற
மாவட்ட விவசாயிகள்
குறுவை
சாகுபடிக்கு தேவையான பசுந்தாள் உர விதைகள் ஒரு
ஏக்கர் பரப்பிற்கு வழங்கப்படுகிறது. ரசாயன உரங்கள் ஒரு ஏக்கருக்கு யூரியா,
டிஏபி உரம் மற்றும் முரயேட்
ஆப் பொட்டாஷ் போன்றவை
அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர்
வரை இலவசமாகத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
100% மானியத்தில்
உரங்கள்
அரியலூர்
மாவட்டத்திற்குக் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் விதை நெல் 40 மெட்ரிக்
டன், 2600 ஏக்கரில் 100 சதவீத மானியத்தில் உரங்கள் மற்றும் பசுந்தாள் உர விதைகள் வாங்கிட
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்
படிக்க....
விவசாயிகளே!! குறுவை சாகுபடிக்கு இடுபொருள் மானியம் இலவசம்!! உடனே பயன்பெறுங்கள்!!
இனி இவர்களுக்கெல்லாம் PM Kisan திட்டத்தில் கீழ் 6000 ரூபாய் கிடைக்காது!! புதிய நடைமுறைகள் என்ன?
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் - கொள்முதல் பணி நிறுத்தம்! விவசாயிகள் வேதனை!!
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...