விவசாயிகளே  நுண்ணீர் பாசனத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.1,13,133 மானியம் - விண்ணப்பிக்கலாம் வாங்க!


நுண்ணீர் பாசன திட்டம்


நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



நுண்ணீர் பாசன கருவிகள் அமைக்க


பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து லாபம் பெறும் வகையில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் கருவிகள் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.


சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.1,13,133 மானியம்


இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அதிகபட்சமாக சொட்டு நீருக்கு 1 ஹெக்டருக்கு ரூ.1,13,133 மானியமும், தெளிப்பு நீருக்கு 1 ஹெக்டருக்கு ரூ.36,176 மானியமும் வழங்கப்படுகிறது.


இதர விவசாயிகளுக்கு ரூ.87,880 மானியம்


இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில், சொட்டு நீருக்கு அதிகபட்சமாக 1 ஹெக்டருக்கு ரூ.87,880, தெளிப்பு நீருக்கு ரூ.28,101 மானியமாக அளிக்கப்படுகிறது.


மானியம் பெற  தேவைப்படும் ஆணவங்கள்


இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்ய வேண்டும்.



பிறகு, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை, அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்காக வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகியவற்றைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.


இதைத்தொடர்ந்து தேவைப்படும் ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும்.


எந்த விவசாயிகள் பயனாளிகள்


இத்திட்டத்தின் மூலம் பழச்செடிகள், காய்கறி பயிர்கள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம்.


விவசாயிகள் எளிதில் பயன்பெறலாம்


மேலும், இத்திட்டத்தின்மூலம் நீர் சிக்கனம், உரம் சிக்கனம், கூலி ஆட்கள் குறைவு, சுலபமான களை மேலாண்மை, அதிகப்படியான மகசூல், வருவாய், தரமான விளை பொருட்கள் ஆகிய பயன்களை கொண்டுள்ளதால் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலமாக எளிதாக பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்ட சிறு குறு விவசாயிகளுக்கு மானியம்


இதேபோல் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் வட்டாரத்தில், தோட்டக்கலை துறை மூலம், நுண்ணீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட, 457 ஹெக்டேருக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.



சிறு குறு விவசாயிகளுக்கு 100 % மானியம்


இதன்படி, சிறு குறு விவசாயிகளுக்கு, ஐந்து ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட, 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம். தேவையான ஆவணங்களுடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தகவல் வெளியீடு


சின்னதுரை,

தோட்டக்கலை உதவி இயக்குனர்.


மேலும் படிக்க....


பசுந்தாள் சாகுபடி உவர் மற்றும் களர் நிலங்களை சீராக்கும் பசுந்தாள் உரங்கள்!


இனி இவர்களுக்கெல்லாம் PM Kisan திட்டத்தில் கீழ் 6000 ரூபாய் கிடைக்காது!! புதிய நடைமுறைகள் என்ன?


PMFBY - பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த அரசு!!


மேலும் தொடர்புக்கு....


ங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை தொடரந்து காணுங்கள் நன்றி......

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

Previous Post Next Post