நெல் இயந்திர
நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு - ஹெக்டேருக்கு ரூ.4,000 மானியம்!
மாவட்ட அறிவிப்பு
தேனி
மாவட்டத்தில் இயந்திர நடவு முறையின் மூலம்
நெல் நாற்றுகளை நடுபவர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.4,000 மானியம் வழங்குவதாக வேளாண்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு திட்டங்கள்
தமிழகத்தில்
வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வில் வளம் ஏற்படுத்தும் வகையில்
பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறுவை
சாகுபடிப் பணிகள்
டெல்டா
பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யத்
தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும்
சில மாவட்டங்களில் உரங்கள், விதை நெல் மற்றும்
பசுந்தாள் விதைகள் போன்றவை மானிய தொகையை வழங்கப்பட்டு வருகின்றன.
நெல் இயந்திர
நடவு
நெல்
நடவுப் பணிகளை உரிய காலத்தே மேற்கொள்ளவும்,
பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து, குறைந்த நீரில் அதிக பரப்பளவில் திருந்திய
நெல் சாகுபடி முறையினை பின்பற்றி மகசூலை உயர்த்தும் வகையில், நடவு இயந்திரம் மூலம்
நெல் நடவுப் பணியை மேற்கொள்ள விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மானியம் பெறுவது
எப்படி
மேலும்,
இயந்திரங்கள் மூலம் நடவுப் பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு
100 சதவீதம் மானியம் என, ஏக்கர் ஒன்றுக்கு
4,000 ரூபாய் மானியத் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சின்னமனூர் வட்டார வேளாண்மை அலுவலர்கள் கூறியதாவது:
நெல் இயந்திர
நடவு மானியம்
குறைந்த
செலவில் அதிக பரப்பளவு நெல்
நாற்றுக்களை நடவு செய்யும் இயந்திர
நடவு முறையைத் தேனி மாவட்ட விவசாயிகளிடம்
ஊக்கவிக்கும் வகையில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.4,000 வரையில் மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்குப்
பயன்
நடவு
இயந்திரத்தில் நாற்றுக்கள் வரிசையாக இருப்பதால் போதிய சூரிய ஒளி கிடைக்கும். இதனால்,
எலி, பூச்சி தாக்குதல் குறையும். இதன் மூலமாக கூலி
பற்றாக்குறை, கூடுதல் பராமரிப்பு செலவு என பொருளாதார ரீதியாக
விவசாயிகள் பயன் பெறுகின்றனர் இவ்வாறு
அவர்கள் கூறினர்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
தேனி
மாவட்டத்தில் இயந்திர நடவு முறையின் மூலம்
நெல் நடவு பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்
சின்னமனூர் வட்டார
வேளாண்மை அலுவலகத்தை தொடர்புகொண்டு
விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
படிக்க....
விவசாயிகளே!! நுண்ணீர் பாசனத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.1,13,133 மானியம் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
PMFBY - பிரதமர் பயிர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த அரசு!!
இனி இவர்களுக்கெல்லாம் PM Kisan திட்டத்தில் கீழ் 6000 ரூபாய் கிடைக்காது!! புதிய நடைமுறைகள் என்ன?
மேலும் தொடர்புக்கு....
எங்களை பற்றி
மேலும் அறிந்துகொள்ள
TIME TO TIPS என்ற YOUTUBE சேனலை
தொடரந்து காணுங்கள்
நன்றி......
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...